சிவாஜிலாம் வில்லனா நடிச்சிருந்தா எனக்கெல்லாம் வேலையே இல்ல!.. நம்பியார் சொன்னதன் பின்னணி!...

சிறு வயது முதல் நாடகங்களில் நடித்து வந்தவர் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர். ஒரு நடிகருக்கு முதல் படமே இப்படி அமையும் என சொல்ல முடியாது. ஆனால், சிவாஜி கணேசனுக்கு அது அமைந்தது. கருணாநிதி கதை வசனத்தில் உருவான இப்படத்தில் வசனங்களில் அனல் பறந்தது.

குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நீதிமன்றத்தில் சிவாஜி பேசிய வசனங்கள் சினிமா உலகில் பெரும் புரட்சியையும், ரசிகர்களிடம் எழுச்சியையும் ஏற்படுத்தியது. அதன்பின் சினிமாவில் தொடர்ந்து நடிக்க துவங்கினார் சிவாஜி. நடிப்பு ஒன்றே சுவாசம் என வாழ்ந்தவர் அவர்.

அதனால்தான் காட்சிகளில் அப்படி ஒன்றி அவரால் நடிக்க முடிந்தது. ஏழை, பணக்காரன், கூலி தொழிலாளி, டாக்டர், வக்கீல், நீதிபதி, போலீஸ் அதிகாரி, சரித்திர கதாநாயகர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், கடவுள் அவதாரங்கள் என அவர் நடிக்காத வேடங்களே இல்லை. அதனால்தான் ரசிகர்கள் அவரை நடிகர் திலகம் என அழைத்தனர்.

வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் சிவாஜிக்கு கடைசி வரை இருந்தது. ஹீரோ, குணச்சித்திரம் என பல வேடங்களில் கலக்கி இருக்கிறார். இந்நிலையில், சிவாஜியுடன் நடித்த அனுபவம் பற்றி நம்பியார் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். உலகின் தலை சிறந்த நடிகர்களில் சிவாஜி முக்கியமானவர்.

உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார் சிவாஜி. அந்த படத்தில் வில்லன் சிவாஜிக்கு துணையாக ஆலோசனை சொல்லும் கதாபாத்திரத்தில் நான் நடித்தேன். அந்த படத்திற்கு பின் சிவாஜி வில்லனாக தொடர்ந்து நடித்திருந்தால் எனக்கு வேலை இல்லாமல் போயிருக்கும்.

யயாதி மகாராஜா பற்றி ஒரு கதை உண்டு. அவருக்கு தேவர்கள் போல வாழவேண்டும் என்கிற ஆசை. அவரின் பிள்ளைகளில் ஒருவர் இளமையை கொடுத்தால் அவருக்கு அது கிடைக்கும். ஆனால், யாரும் கொடுக்க மாட்டார்கள். அவர் வெறுத்து ஒதுக்கிய அவரின் மகன்களில் ஒருவர் தனது இளமையை அவருக்கு கொடுத்ததாக ஒரு கதை உண்டு. யயாதி மகராஜாவாக சிவாஜி இருந்தால் நான் என் இளமையை அவருக்கு கொடுத்திருப்பேன்’ என சொன்னவர் நம்பியார்.

Related Articles
Next Story
Share it