மாதந்தோறும் 2 பெண்களுக்கு உதவி செய்யும் எஸ்.ஜே.சூர்யா!. யாருக்கும் தெரியாத விஷயம்!

ஈரம், தம்பி வெட்டோத்தி சுந்தரம், மௌனம் பேசியதே, அதிதி, வேலூர் மாவட்டம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் நந்தா. இவர் பிரபல தயாரிப்பாளர் சித்ராலட்சுமணனிடம் ஒரு ரியாலிட்டி ஷோ குறித்து சில தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
ரியாலிட்டி ஷோ: சன்டிவி எங்ககிட்ட தெலுங்குல ஒரு ரியாலிட்டி ஷோ இருக்கு. அதைத் தமிழ்ல பண்ணுங்கன்னு சொன்னாங்க. இந்த ஷோவைப் பற்றிச் சொன்னதும் விஷால் ஓகே சொல்லிட்டாரு. அவருதான் ஆங்கர். தமிழ்ல 'சன் நாம் ஒருவர்' னு பண்ணினோம். கார்த்தி, கீர்த்தி சுரேஷ், எஸ்ஜே.சூர்யா எல்லாரும் இந்தக் காரணம் சொன்னதுக்கு அப்புறம் எங்களுக்கு ஆதரவு கொடுத்தாங்க. அதனால இந்த ஷோ பெரிய அளவில் வந்தது.
13 பேருக்கு உதவி: நாளைக்கு உயிரோடு இருப்போமா இல்லையாங்கற ஒரு நிலையில் அடிமட்டத்துல இருக்கிறவங்களுக்கு அவங்க நிலையை மாற்றணும். அவங்களுக்கு உதவுறதுக்கு யாரும் இல்லை. அதுக்காக நாங்க நிறைய கதையைத் தயார் பண்ண வேண்டியது சவாலா இருந்தது. 13பேருக்கு உதவி செய்றோம். இன்னும் 365 அப்ளிகேஷன் வந்துருக்கு. படிக்காதது 700 அப்ளிகேஷன் இருக்கு.
எஸ்.ஜே.சூர்யா: இந்த ஷோவுல பெரிய திருப்தி என்னன்னா இன்னைக்கு வரைக்கும் அந்த 13 குடும்பங்களும் நல்லா இருக்காங்க. அந்தக் குழந்தை இன்னைக்கு காலேஜ் படிக்கிறாங்க. ஒரு அம்மாவும், ரெண்டு பொண்ணும் வந்துருந்தாங்க. அப்போ எஸ்.ஜே.சூர்யா சார் சொன்னாரு.
மாசம் 50 ஆயிரம்: இந்த 2 பொண்ணுங்களுக்கும் கல்யாணம் ஆகுற வரைக்கும் நான் மாசம் 50 ஆயிரம் கொடுக்கிறேன்னாரு. அந்த ஷோவுல பிராமிஸ் பண்ணினாரு. அந்த ஷோ முடிஞ்சு அஞ்சாறு வருஷம் ஆச்சு. இன்னைக்கு வரைக்கும் மாசம் 50 ஆயிரம் அந்தக் குடும்பத்துக்குக் கொடுக்குறாரு. அது யாருக்கும் தெரியாது.
ஸ்க்ரீன் ஷாட்: இன்னைக்கு வரைக்கும் அவர் அனுப்புனதை எனக்கு ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அனுப்புவாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த ஷோ மூலமாக என்னையும், ரமணாவையும் தயாரிப்பாளர் ஆக்கியது நடிகர் விஷால்தான் என்று நந்தா பெருமையாகத் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய விஷயம்: எல்லாரும் மேடையில ஆயிரம் பேசுவாங்க. ஆனா நிஜத்துல அதைச் செய்ய மாட்டாங்கன்னு சொல்வாங்க. ஆனா எஸ்.ஜே.சூர்யா சொன்னதை சொன்ன மாதிரி இன்று வரைக்கும் செய்றாருன்னா அது மிகப்பெரிய விஷயம். ஒரு குடும்பத்தையே வாழ வைக்கிறாருங்கறது உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியதுதான்.