நடிகர் விஷாலின் நட்பு வட்டாரத்தில் நந்தா, ரமணா ஆகியோருக்கு முக்கியப் பங்கு உண்டு. சமீபத்தில் உடல் நலத்தால் பாதிக்கப்பட்டு இருந்தார் நடிகர் விஷால். அதற்கு அவர்களது நட்பு வட்டாரம்தான் காரணம் என சோஷியல் மீடியாக்களில் பேசப்பட்டது. இதுகுறித்து நந்தா என்ன சொல்றாருன்னு பாருங்க.
காலம்தான் பதில் சொல்லும்: விஷாலோட உடல்நிலை சரியில்லாம போனதுக்கு நாங்கதான் காரணம்னு பேசுறாங்க. அதுக்குக் காலம்தான் பதில் சொல்லும். உண்மைகள் புரியவரும். சில விஷயங்கள் புரியாமல் இருந்துருக்கலாம். 2 வருஷம் நாங்க கூடவே இல்லை. நாங்க எப்படி காரணமா ஆகியிருக்க முடியும்? எனக்கு அதிகமான காய்ச்சல். வைரஸ் காய்ச்சல்னு அவரே சொல்லிட்டாரு.
விஷாலுக்கு தெரியும்: அதுக்கு அப்புறம் கூட நாங்கதான் காரணம்னு சொல்வது அப்பட்டமான குற்றச்சாட்டு. நாங்க எவ்வளவு சப்போர்ட்டா இருந்தோம் அவருக்கு. விஷாலுக்கும் அவரது பெற்றோருக்கும் இது தெரியும். என்கிறார் நடிகர் நந்தா. ரெண்டாவது வச்ச குற்றச்சாட்டு அவரைச் சுற்றி நாங்க வேலி அமைச்சிட்டோம்னு சொன்னாங்க.
25 படங்கள் ஹீரோ: இவங்க யாருமே விஷாலை சந்திக்க விடல. இது 2025ல் உச்சக்கட்டமான குற்றச்சாட்டு. அவரு குழந்தை கிடையாது. 25 படங்கள் பண்ணின ஹீரோ. 15 படங்கள் தயாரிச்சவரு. நடிகர் சங்கத்துல பொதுச்செயலாளர். புரொடியூசர் கவுன்சில்ல தலைவரா இருந்துருக்காரு. அவரை நாங்க எப்படி கன்ட்ரோல் பண்ண முடியும்?
அவன் இவன்: நாங்க யாரை நெருங்க விடலன்னு சொல்லச் சொல்லுங்க. அதுல ஒரு ஆதாரம் வேணும். அவன் இவன் மிகப்பெரிய படம். அந்தப் படத்துக்கு விஷால் எவ்வளவு கஷ்டப்பட்டுருக்காரு. அதுக்கு பாலா சார் எவ்வளவு கஷ்டப்பட்டுருக்காரு. அதுதான் அவர் உடல்நிலை சரியில்லாமப் போனதுக்குக் காரணம்னு சொல்ல முடியாது.
அபாண்டம்: அது எவ்வளவு பெரிய அபாண்டம். நாங்க அவருக்குப் பணம் கொடுக்கல. ஏமாத்திட்டோம்னு சொல்றாங்க. அதனாலதான் உடம்பு சரியில்லாம போயிடுச்சுன்னு சொல்றாங்க. எதுவுமே தெரியாம குற்றச்சாட்டு வைக்கக்கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…