அப்பா புருஸ்லீ மாதிரின்னு சொல்றாரே பாண்டியன் மகன்... அவரோட ஆசை என்னன்னு பாருங்க..!

நடிகர் பாண்டியன் பாரதிராஜா இயக்கிய மண்வாசனை படத்தின் மூலம் ஹீரோவாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியவர். இவரது மகன் ரகு தன் தந்தை குறித்து பல தகவல்களை தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம். அப்பா வந்து அடுத்த புருஸ்லீ. அவரு ஜிம்னாஸ்டிக், கராத்தே, சிலம்பாட்டம் எல்லாம் நல்ல பண்ணுவாரு.
அப்பாவின் வேலைகள்: அப்பா பிடிக்காம தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டாரு. அப்பா ரொம்ப பிசியா இருந்தார். சூட்டிங் அல்லது அரசியல்னு போவாரு. வீட்ல இருக்கவே மாட்டாரு. ரியல் எஸ்டேட் பிசினஸ், பிளைட் ஏஜென்டா இருந்தாரு.
ஏழைகள், பணவசதி இல்லாதவங்களைப் படிக்க வச்சாரு. எல்லாருக்குமே எங்க அப்பாவை ரொம்பப் பிடிக்கும். எங்க அப்பா, நான், அம்மா 3 பேரும் பெரிய மருது படம் பார்த்தோம். அதுல தான் செகண்ட் ஹீரோ. விஜயகாந்த் சார் நடிச்சிருப்பாரு.
ஏகப்பட்ட பேரு லவ்: எங்க அப்பா தேடிப் போக மாட்டாரு. தேடித்தான் வரும். லவ்வும் சரி. கல்யாணமும் சரி. தேடிப் போகல. தேடித்தான் வந்தது. எங்க அப்பாவை வந்து ஏகப்பட்ட பேரு லவ் பண்ணினாங்க. ஆனா எங்க அப்பா வந்து விலகிப் போயிருக்காரு.
எனக்குப் பெரிய டைரக்டர் ஆகணும்னு ஆசை. இந்திப்படத்துல எல்லாம் நடிக்கணும்னு ஆசை. நிறைய ஸ்கிரிப்ட் வச்சிருக்கேன். லாயர் படிக்கணும்னு ஆசை.
அப்பா சொன்ன அட்வைஸ்: நான் எத்தனை நாள் இருக்கப் போறேன்? நீதான் உன்னைப் பார்த்துக்கணும். அம்மாவைப் பார்த்துக்கணும். எல்லாரும் கைகொடுத்துப் போக மாட்டாங்க. உங்கிட்ட பணம் இருந்தாதான் உன் விருப்பப்பட்டவங்க எல்லாம் தேடி வருவாங்க.
படிப்பு தான் உன் கேரியர்: நான் இருக்குற வரைக்கும்தான் இந்த ஒரு ஆதரவும். நான் இறந்தா இந்த ஒரு ஆதரவும் இல்ல. உன்னை நீ பார்த்துக்கோ. படிப்பு தான் உன் கேரியர். அதுதான் கடைசி வரைக்கும் வரும். நீ எப்படி இருக்கியோ அதுக்குத் தகுந்தபடி தான் உனக்கு வரப்போறவளும் வருவார்னு அப்பா அடிக்கடி சொல்லிருக்காரு.
அப்பா தன்னைப் பற்றி யோசிச்சிருந்தா இவ்ளோ பிரச்சனை வந்துருக்காது. கொஞ்சம் முரட்டுத்தனமானவர். ஆனா அந்தளவுக்கு ரொம்ப நல்லவர். அம்மா ஒரு மெச்சுரிட்டி இல்லாதவங்க. குழந்தைமாதிரி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.