வந்த இடத்தில் வனிதாவை ஹனிமூனுக்கு அழைத்த பவர் ஸ்டார்! மேடம் சும்மா இருப்பாங்களா?
தமிழ் சினிமாவில் தற்போது ஒரு கம்பேக் என்றே சொல்லலாம் வனிதா விஜயகுமார். சந்திரலேகா படத்தின் மூலம் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமான வனிதா விஜயகுமார் மாணிக்கம் படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக நடித்தார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த வனிதா கல்யாணம் , குழந்தை என வெகு சீக்கிரமாக சினிமாவிற்கு குட் பை சொல்லிவிட்டார்.
திருமணத்திற்கு பிறகு குடும்பமே கதி என இருந்தவருக்கு சொந்த வாழ்க்கையிலும் ஏகப்பட்ட பிரச்சினைகள். கணவர் விவாகரத்து என அடுத்தடுத்து பிரச்சினைகளையே சந்தித்து வந்தார். சொத்து தகராறில் தன் அப்பாவுடனும் சண்டை போட்டு மொத்தமாக தன் குடும்பத்தில் இருந்தே விலகி தன் மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
இதற்கிடையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் வனிதா வாழ்க்கையில் ஏறுமுகம் என்று சொல்லலாம். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு மக்களை ஈர்த்து வந்தார்.
அதன் விளைவு தொடர்ந்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பும் வந்தது. இப்போது ஒரு பிஸியான நடிகையாக மாறியிருக்கிறார் வனிதா விஜயகுமார். பிரசாந்த் நடிப்பில் வரும் 9 ஆம் தேதி ரிலீஸாகும் அந்தகன் படத்தில் கூட வனிதா நடித்திருக்கிறார்,
இந்த நிலையில் வனிதா லீடு ரோலில் நடிக்கும் வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பவர் ஸ்டாருக்கும் அந்த விழாவிற்கு வருகை தந்தார். அப்போது பேசிய பவர் ஸ்டார் வனிதாவை நெருக்கமான தோழி என கூறினார். அதற்கு வனிதா ‘தோழியா? நமக்கு கல்யாணமே பண்ணி வச்சிட்டாங்க’ என கூறினார்.
பிக்கப் படத்தின் ஒரு போஸ்டர் வெளியான போது வனிதாவும் பவர்ஸ்டாரும் திருமணம் செய்து கொண்டார்கள் என செய்திகள் பரவியது. இதை குறிப்பிட்டுத்தான் வனிதா கூறினார். அதற்கு பவர் ஸ்டார் ‘ஆமா நடந்தா நல்லா இருக்கும்’ என சிரித்துக் கொண்டே கூறினார்.
இதற்கு பதில் வனிதா ‘கல்யாணம் நடந்தப் பிறகு ஒன்னுமே நடக்கலங்க’ என டபுள் அர்த்தத்தோடு கூற அதற்கு பவர் ஸ்டார் ‘ஒரு தேதியை ஃபிக்ஸ் பண்ணுங்க.ஹனிமூன் போயிட்டு வருவோம்’ என சொல்ல அரங்கமே சிரித்தது.