Categories: Cinema News latest news

புஷ்பா 2 ஹிட்டுதான்!. ஆனா நான்தான் கிங்!.. பிரபாஸுக்கு சம்பளம் இவ்வளவு கோடியா?!..

Prabas: தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் பேன் இண்டியா நடிகராக மாறியவர் பிரபாஸ். ஏனெனில், பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் தெலுங்கு மொழியில் மட்டுமின்றி தமிழ், ஹிந்தி மொழிகளிலும் நல்ல வசூலை பெற்றது. அதிலும் பாகுபலி 2 படம் ஆயிரம் கோடியை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முன்னணி நடிகர்கள் எல்லோருக்கும் தன்னுடைய படங்கள் பேன் இண்டியா படமாக வெளியாக வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் படங்களே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. இப்போதெல்லாம் தமிழ் படங்களே தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

பாகுபலி 2 ஹிட்டுக்கு பின் சாஹோ, ராதே ஷ்யாம், சலார், ஆதிபுருஷ், கல்கி என தொடர்ந்து பேன் இண்டியா நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். இப்போது இவரின் எல்லா படங்களுமே தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுவதும் பல ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி வருகிறது.

பாகுபலி 2 பாகங்களிலும் 25 கோடி சம்பளம் வாங்கி 5 வருடங்கள் நடித்த பிரபாஸ் அதன்பின் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்திவிட்டார். அடுத்து சலார் 2, கல்கி 2 ஆகிய படங்களில் நடிக்கவிருக்கிறார் பிரபாஸ். இந்நிலையில்தான், பிரபாஸ் பற்றிய் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎப் படத்தை தயாரித்த ஹோம்பலே பட நிறுவனம் மூன்று திரைப்படங்களுக்கு பிரபாஸை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் 200 கோடி சம்பளம் என 3 படங்களுக்கும் சேர்த்து 600 கோடி சம்பளம் பேசி ஒரு பெரிய தொகையை முன் பணமாக வாங்கிவிட்டாராம் பிரபாஷ்.

ஆயிரம் கோடி வசூல் செய்த புஷ்பா 2 படத்தின் நடிகர் அல்லு அர்ஜூன் தனது சம்பளத்தை 180 கோடி வரை உயர்ந்தியிருந்தார். ஆனால், அவரை விட பிரபாஸ் அதிக சம்பளம் வாங்குகிறார். ஆனாலும் புஷ்பா 2 மெகா ஹிட்டுக்கு பின் அல்லு அர்ஜூனும் தனது சம்பளத்தை உயர்த்துவார் என்றே கணிக்கப்படுகிறது.

Published by
சிவா