வயநாடு நிதி உதவிக்கு 2 கோடியை தூக்கிக் கொடுத்த பிரபல நடிகர்! இதனால்தான் எப்பவுமே அவர் டார்லிங்

by ராம் சுதன் |

இந்தியா முழுவதும் உலுக்கிய ஒரு கோர சம்பவம் என்றால் அது சமீபத்தில் நடந்த வயநாடு நிலச்சரிவு சம்பவம் தான். கேரள மாநிலத்தில் உள்ள வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். எத்தனையோ பேர் மண்ணில் புதையுண்டு இறந்திருக்கின்றனர்.

அவர்களை தோண்டும் பணிகள் தற்போது வரை நடந்து கொண்டு இருக்கின்றன. அதில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் எப்படி எல்லாம் நாங்கள் பாதிக்கப்பட்டோம், அந்த நேரத்தில் எங்களுடைய மனநிலை எப்படி இருந்தது என்பது பற்றி பல பேட்டிகளில் கூறி வருவதை பார்த்து வருகிறோம்.

தற்போது மீட்பு பணிகள் நிவாரண பணிகள் குறித்து இதற்கான ஒரு அறிக்கை பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது .

இதில் பல கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு வீடுகள் கட்டிடங்கள் மரங்கள் வாகனங்கள் என அனைத்தும் மண்ணோடு மண்ணாக அடித்து செல்லப்பட்டன. இதனால் நிறைய பேர் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து இன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்கு உதவும் விதமாக இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இருந்தும் சமூக ஆர்வலர்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இதில் தமிழ் திரையுலகை சார்ந்த பலரும் லட்சங்களில் நிவாரண உதவிகளை கொடுத்திருக்கின்றனர். அதில் சிவகுமார் குடும்பம் 50 லட்சம் நிதி உதவியாக கொடுத்திருக்கின்றனர். நயன்தாரா 20 லட்சமும் ராம்சரண் 25 லட்சமும் சிரஞ்சீவி ஒரு கோடி என அடுத்தடுத்து பிரபலங்கள் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகர் பிரபாஸ் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவும் வகையில் நிதியுதவியாக இரண்டு கோடியை கொடுத்திருப்பதாக தற்போது வந்த தகவல் கூறுகிறது. இதைப் பற்றி சோசியல் மீடியாவில் அவருக்கு ரசிகர்கள் பலரும் நன்றியையும் அன்பையும் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதனால் தான் அவர் எப்பொழுதுமே டார்லிங் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story