Actor Vijay: ஒரு திரைப்படத்தின் ஆதாரமே கதைதான். கதை சரியாக அமைந்தால் மட்டுமே படம் ஹிட் அடிக்கும். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் கதையை எழுதுவதற்காகவே கதாசிரியர் இருப்பார்கள். படத்தை இயக்குவது மட்டுமே இயக்குனரின் வேலை. ஆனால், பாரதிராஜாவுக்கு பின்னால் வந்த இயக்குனர்கள் தாங்களே கதையை எழுதினார்கள்.
அதற்கு காரணமாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒன்று டி.ராஜேந்தர், மற்றொருவர் பாக்கியராஜ். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என எல்லாவற்றையும் அவர்களே செய்தார்கள். ஒருபக்கம், ஒரு நல்ல கதையில் நடிக்க பல நடிகர்களும் போட்டி போடுவார்கள். ஒரு நடிகருக்கு சொல்லப்பட்ட கதையில் வேறு நடிகர் நடிப்பார்.
இயக்குனர் மாற்றப்படுவார், தயாரிப்பாளர் மாற்றப்படுவார். சினிமாவில் எப்போது என்ன நடக்கும் என சொல்லவே முடியாது. ஒரு சின்ன நடிகரை வைத்து ஒரு நல்ல கதையை ஒரு தயாரிப்பாளர் எடுக்க நினைக்கும் போது, அந்த கதையில் ஒரு பெரிய நடிகர் நடிக்க ஆசைப்பட்டால் அந்த சின்ன நடிகரை கழட்டிவிட்டு விடுவார்கள்.
இது சினிமாவில் எப்போதும் நடக்கும். ஒரு இரவில் எல்லாம் மாறிவிடும். கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ஹரிஸ் கல்யாண்தான். அவரிடம் சொல்லாமலேயே கவினை வைத்து ஷூட்டிங்கை துவங்கிவிட்டார்கள். இது சினிமாவில் சகஜம். அந்தவகையில், வேறு ஒரு நடிகருக்கு சொன்ன கதையை விஜய் ஆட்டைய போட்ட சம்பவம் பற்றி பார்ப்போம்.
தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘அஜித்தின் வாலி படம் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சமயம். விஜய் சார் என்னிடம் ‘வாலி படம் பார்த்தேன். எஸ்.ஜே.சூர்யான்னு ஒரு டைரக்டர் பண்ணி இருக்கார். படம் நல்லா இருக்கு. அவர்கிட்ட பேசுங்க’ என சொன்னார். உடனே எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசினேன். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் பிரபுதேவாவை வச்சி ஒரு படம் பண்ண போறேன்னு சொன்னார்.
ஏ.எம்.ரத்னம் என் நண்பர் என்பதால் அவரிடம் போய் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடிக்க ஆசைப்படுகிறார் என சொன்னேன். அதன்பின் ஒரு மாதம் வெளிநாட்டுக்கு போய்விட்டேன். வந்து பார்த்தால் அதே கூட்டணியில் விஜய் நடிப்பதாக குஷி படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. பிரபுதேவாவுக்கு சொன்ன கதையை விஜய்க்கு ஏற்றமாதிரி சில மாற்றங்கள் செய்து எஸ்.ஜே.சூர்யா படத்தை இயக்கி கொண்டிருந்தார். நான் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை’ என சொல்லி இருக்கிறார்.
அவர் பேசும் வீடியோவை ரஜினி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ‘விஜய், அஜித்தை வச்சி ஹிட் படம் கொடுக்கும் இயக்குனர்களை ரஜினி அழைத்து அவர்களின் இயக்கத்தில் படம் நடிப்பார் என விஜய் ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், இன்னொரு ஹீரோவுக்கு சொன்ன கதையை விஜய் எப்படி திருடி இருக்கிறார்?’ என பதிவிட்டு வருகிறார்கள்.
குஷி படம் விஜயின் சினிமா கேரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசிய வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.
Aishwarya rai:…
Amaran: ராஜ்கமல்…
நடிகர் சிம்பு…
Biggboss 8: விஜய்…
தக் லைஃப்…