பிரதீப் ரங்கநாதன் தாடிக்கு பின்னால் இப்படியொரு கதை இருக்கா!.. நல்லவேளை சொன்னாரு!...

Pradeep Ranganathan: கல்லூரி படிப்புக்கு பின் குறும்படங்களை எடுக்க துவங்கியவர் பிரதீப் ரங்கநாதன். சினிமாவில் நுழைய வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் யாரும் உதவவில்லை. சினிமாவில் யாரையும் தெரியவும் இல்லை. பல வருடங்களுக்கு முன்பு தனது குறும்படம் தொடர்பான டிவிட்டை பிரேம்ஜிக்கெல்லாம் டேக் செய்து ‘இதை ரீடிவிட் பண்ணுங்க சார்’ என கேட்டவர்தான் பிரதீப்.
கோமாளி: சினிமாவுக்காக ஒரு கதை எழுதி பல முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை. ஜெயம் ரவியை சந்தித்து கதை சொன்னார். கதை நன்றாக இருந்தாலும் பிரதீப் அதை இயக்குவாரா என்கிற சந்தேகம் ரவிக்கு வர ‘இந்த கதையில் வரும் ஒரு காட்சியை இயக்கி என்னிடம் காட்டு. எனக்கு பிடித்திருந்தால் நடிக்கிறேன்’ என சொல்ல பிரதீப் அப்படி ஒரு காட்சியை இயக்கி அவரிடம் காட்டினார்.
டிராகன்: அதன்பின் பிரதீப்பை நம்பி நடிக்க துவங்கினார் ரவி. அப்படி உருவான கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் சில வருடங்கள் கழித்து லவ் டுடே என்கிற படத்தை இயக்கி நடித்தார். இந்த படமும் ஹிட் அடிக்க இப்போது முழுநேர நடிகராகிவிட்டார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே என்கிற படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்கிற படத்திலும் நடிக்க துவங்கினார்.
இதில் டிராகன் படம் முடிந்து வருகிற 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், இயக்குனர் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், கயடு லோஹர், கே.எஸ்.ரவிக்குமார், விஜே சித்து உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியானது.
தாடிக்கு ஒரு பிளாஷ்பேக்: பார்ப்பதற்கு டான் படம் போல இருந்தாலும் அதை மறுத்தார் அஸ்வத் மாரிமுத்து. கண்டிப்பாக டிராகன் படம் எல்லோருக்கும் பிடிக்கும் என சொல்லியிருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பிரதீப் பல தகவல்களை பகிர்ந்துகொண்டார். தன்னுடைய தாடி பற்றி பேசிய அவர் ‘ஏழு வருடங்களுக்கு முன்பு ஒரு ஷார்ட் பிலிம் எடுக்கும்போது கிளீன் சேவ்ல இருந்தேன். எனவே, பார்ப்பதற்கு சின்ன பையன் போல இருப்பேன். அப்படி தெரியக்கூடாதுன்னுதான் தாடி வளர்க்க ஆரம்பிச்சேன்.
ஏன்னா, டைரக்டர் சின்ன பையன்னு சொல்லிடுவாங்க. கொஞ்சம் பெரிய பையனா தெரியும்னுதான் தாடியோட இருந்தேன். டிராகன் படத்தில் நடிக்கும்போது சேவ் பண்ணி நடிச்சேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னை அப்படி பார்த்தது எனக்கே சந்தோஷமாக இருந்தது’ என சொல்லியிருக்கிறார்.