அந்த வார்த்தையை முதல்ல கண்டுபிடிச்சதே நான்தான்.. எங்கிட்டயே இந்த கேள்வியா? அதிரவைத்த பிரசாந்த்

by ராம் சுதன் |

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதற்கான பிரஸ் மீட்தான் இப்போது நடந்து வருகிறது. படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. இந்தப் படத்தில் பிரசாந்துடன் இணைந்து சிம்ரன், பிரியா ஆனந்த், ஊர்வசி, சமுத்திரக்கனி, கார்த்திக் போன்ற பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

அதுவும் நடிப்புக்கு தீனி போடும் நடிகர்களாகவே அந்தகன் படத்தில் நடித்திருக்கின்றனர் என்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட்டே. இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் ரீமேக்தான் இந்த அந்தகன் திரைப்படம். படத்தில் கண் தெரியாத ஒரு பியானோயிஸ்டாக நடித்திருக்கிறார் பிரசாந்த்.

கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், ஜோடி என ஒரு வெற்றி ஜோடியாக வலம் வந்த பிரசாந்த் மற்றும் சிம்ரன் ஜோடி நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மேலு சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதனாலேயே படத்தின் மீது சற்று எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.இதை பற்றி இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு செய்தியாளர் பிரசாந்திடம் ‘ நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்ரனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறீர்கள். இப்போது உங்கள் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கிறது?’ என கேட்டார்.

அதற்கு பதிலளித்த பிரசாந்த் ‘கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரியாகவே தான் இருக்கிறது. இந்த வார்த்தையை முதன் முதலில் சினிமாவில் கொண்டு வந்ததே நான்தான். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த போது அங்குதான் இந்த வார்த்தையை கூறினேன்.’

‘சரி கெமிஸ்ட்ரியை பற்றி கூற வேண்டுமென்றால் H2o, C6, சல்ஃபூயிரிக் ஆசிட், நைட்ரிக் ஆசிட் எல்லாம் சேர்ந்து நன்றாக இருக்கிறது. முதலில் இந்தப் படத்தில் எனக்கு ஜோடி சிம்ரன் என எப்படி தெரியும்? படம் வெளியாகும் போது சில ட்விஸ்ட்கள் இருக்கும். பாருங்கள்’ என கூறினார்.

Next Story