அந்த துரோகம் மறக்க முடியாது! மனம் திறக்கும் பிரசாந்த்.. ரொம்பவே கஷ்டப்பட்டுருப்பாரு போலயே
தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக என்றுமே ரசிகர்கள் மத்தியில் வலம் வருபவர் நடிகர் பிரசாந்த். நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வருகிறார் பிரசாந்த். அந்தகன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கின்றது. படம் எடுத்து சில வருடங்கள் ஆகியும் இப்போதுதான் ரிலீஸாக இருக்கின்றன.
படத்தில் பிரசாந்துடன் பெரிய பெரிய ஜாம்பவான்களும் நடித்திருக்கின்றனர். ஆல் டைம் ஃபேவரைட் ஜோடியான சிம்ரனும் இந்தப் படத்தில் மீண்டும் பிரசாந்துடன் இணைந்திருப்பது ஒரு வகையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல சேனல்கள் பிரசாந்தை பேட்டி எடுத்து வருகிறார்கள்.
அதில் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஏராளமான படங்களை தவறவிட்ட ஒரு செய்தியையும் பிரசாந்த் கூறியிருக்கிறார். அஜித் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது பிரசாந்த் என அனைவருக்கும் தெரியும்.
அந்தப் படத்தில் ஐயோ நடிக்காமல் விட்டுவிட்டோமே என என்றைக்காவது வருத்தப்பட்டது உண்டா? என்ற கேள்வியை கேட்க அதற்கு பிரசாந்த் ‘அப்படியெல்லாம் வருத்தப்பட்டதே இல்லை. அந்த நேரத்தில் வேறொரு கமிட்மெண்ட்டில் இருந்தேன். இதை விட அதுதான் எனக்கு முக்கியமாக பட்டது’ என கூறினார்.
அதோடு ஷங்கர் முதலில் காதலன் படத்தில் பிரசாந்தைத்தான் அணுகினாராம். அப்போது வேறொரு கமிட்மெண்டில் இருந்தாராம் பிரசாந்த். இப்படி நிறைய படங்களை சொல்லிக் கொண்டே போகலாம் என்றும் கூறினார். மேலும் என்னுடைய ஒரு படம் வெற்றி பெற்றால் அதை கொண்டாடியதும் இல்லை. தோல்வியடைந்தால் அதற்காக வருத்தப்பட்டதும் இல்லை என்றும் கூறினார்.
அதே போல் நான் நடிக்க இருந்து அதை இன்னொரு நடிகர் நடித்து வெற்றிப்பெற்றாலும் அதை சந்தோஷமாகத்தான் பார்த்திருக்கிறேன். அதுதான் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நல்லது என பிரசாந்த கூறினார்.
இந்த நிலையில் துரோகம் என்ற ஒரு வார்த்தையை கூறி என்ன நினைக்கிறீர்கள் என தொகுப்பாளினி கேட்ட போது அதற்கு பிரசாந்த் ஒரு நிமிடம் சைலண்ட்டாக இருந்து ‘அது ஒரு எமோஷன். நம்பியவர்கள் ஏமாற்றுவது தான் துரோகம். என் வாழ்க்கையில் அதுதான் நடந்தது’ என கூறினார்.