பிரசாந்திடம் ப்ரோபோஸ் பண்ண ஹீரோயின்! பேசாம இவங்களயே கல்யாணம் பண்ணியிருக்கலாம்

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு டாப் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பிரசாந்த். தற்போது அவர் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார். 90கள் காலகட்டத்தில் இவர்தான் டாப் ஸ்டார். அஜித் , விஜயையே பின்னுக்கு தள்ளி ஒரு முன்னணி நடிகராக இருந்தவர் பிரசாந்த்.

ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். பெண்களின் மனதை கொள்ளைக் கொண்ட நடிகராகவும் இருந்தார். சார்மிங் நடிகராக, லவ்வர் பாயாக, தமிழ் சினிமாவில் ஒரு காதல் நாயகனாக வலம் வந்தார் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரசாந்த் தொடர்ந்து பல படங்களில் நடித்து கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார்.

ஆனால் தொடர்ந்து பிரசாந்தால் சினிமாவில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சில பல சொந்த பிரச்சினையால் சினிமாவிலும் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் இப்போது அந்தகன் படத்தின் மூலம் அவருடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் நடிக்கும் கோட் படத்திலும் நடித்திருக்கிறார். கோட் திரைப்படமும் பிரசாந்திற்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் படமாக அமையும் என்று அனைவரும் நம்புகின்றனர். இந்த நிலையில் அந்தகன் பட ப்ரோமோஷனில் கலந்து கொண்டு வரும் பிரசாந்திடம் ஏகப்பட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அதில் அவர் விரும்பும் ஆன் ஸ்க்ரீன் ஜோடி யார் என்று கேட்டதற்கு சிம்ரன் என பதிலளித்திருந்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடன் நடித்த அனைத்து நடிகைகளும் தனக்கு நெருக்கமான தோழிகளாகவே இருந்திருக்கின்றனர் என்றும் பதில் அளித்திருந்தார்.

இந்த நிலையில் பல ஹீரோயின்கள் பிரசாந்தை காதலிப்பதாக கூறினார்களாம். ஆனால் அந்த நேரத்தில் படங்களில் மிகவும் பிஸியாக இருந்ததனால் இப்போது வேண்டாம். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பிரசாந்த் சொல்லிவிட்டாராம்.

இந்த பேட்டியை பார்த்த பல பேரும் அப்படி காதலிப்பதாக சொன்ன நடிகைகளில் ஒருவரை திருமணம் செய்திருந்தால் கூட இன்று உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைந்திருக்குமே என்று கமெண்டில் கூறி வருகிறார்கள்.

Next Story