அட்ட பழசா இருக்கே.. ராஜாவின் டியூனை நக்கலடித்த ராதாரவி! இசைஞானி கொடுத்த பதில்

by ராம் சுதன் |

கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலமாக திரையுலகில் இசையில் பெரிய சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இந்த சினிமாவில் அறிமுகமானார் இளையராஜா. அதிலிருந்து இவருடைய இசைதான் தமிழ் ரசிகர்களின் காதுகளுக்கு இனிமையை சேர்த்து வருகிறது. சோகமாக இருந்தாலும் சரி சந்தோஷமாக இருந்தாலும் சரி. இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்தான் அனைவருக்குமான மருந்து.

அதே போல் வெளியூர் பயணங்கள் மேற்கொண்டாலும் இவர் பாடலை கேட்டுக் கொண்டே போகும் போது அந்த பயணமே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அன்றிலிருந்து இன்றுவரை இளையராஜாவின் இசைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 80ஸ் கிட்ஸ்கள் மட்டுமில்லாமல் இப்போதுள்ள 2 கே கிட்ஸ்களும் இளையராஜாவின் இசையை விரும்பி கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ராதாரவி இளையராஜாவை பற்றி அவருடைய கருத்துக்களை ஒரு மேடையில் பகிர்ந்திருக்கிறார். அதாவது ராதாரவிக்கு தேவா என்றால் மிகவும் பிடிக்குமாம். அவர் போடுவதும் இசைதான். ஆனால் இன்னொரு சகோதரர் இருக்கிறார். அவரிடம் இருந்து இசையை வாங்குவது அவ்வளவு எளிதான காரியமில்லை. இது நம்ம பூமி படத்திற்காக படத்தின் இயக்குனர் என்னை அனுப்பி இளையராஜாவிடம் இருந்து டியூனை வாங்கி வரும் படி சொன்னார்.

ஏனெனில் அந்தப் படத்திற்கு நான் தான் தயாரிப்பாளர். அதனால் நான் இளையராஜாவை சந்திக்க போனேன். படத்திற்கு டியூன் அவசரமாக தேவைப்பட்டதால் இளையராஜாவும் அவசரமாக போட்டுக் கொடுத்தாராம். கொடுக்கும் போது இது ஒரு பழைய டியூன்டா. நீ ரொம்ப அவசரப்படுறீயேனு இப்படி செஞ்சேன் என கூறி அந்த பாட்டை கொடுத்திருக்கிறார். ஆனால் ராதாரவி சும்மா இருப்பாரா?

அதற்கு ‘பழசா இருக்கலாம்ன.. ரொம்ப ஊசிப் போயிருக்கே. இழுத்தா நூல் கூட வருதே’னு சொல்லிட்டாராம். ஏய் ரொம்ப பிரம்மாதமா சொல்றான்யா ராதாரவி. அத கேளுங்கய்யானு எல்லார்கிட்டயும் போய் சொன்னாராம் இளையராஜா. இதை பற்றி கூறும் போது ‘உண்மையை சொல்லும் போது பயப்படக் கூடாது. உண்மைக்கு மட்டும் பயம் வரவே கூடாது. எங்க இருந்தாலும் துணிச்சலா சொல்லணும்’ என அந்த மேடையில் ராதாரவி பேசினார்.

Next Story