என்னத்த பாத்து கொடுத்தாங்க! மிஸ் மெட்ராஸ் பட்டத்தை வென்ற நடிகையை கலாய்த்த ராதாரவி

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரமாகவும் குணச்சித்திர கதாபாத்திரமாகவும் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்த நடிகர் ராதாரவி. எம்.ஆர்.ராதாவின் மகன் என்று ஒரு புகழ் இருந்தாலும் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் சினிமாவில் ஒரு தனி இடம் பிடித்தார். பெரும்பாலும் விஜயகாந்த் நடித்த படங்களில் வில்லனாக ராதாரவியை பார்க்கலாம்.

விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும் ராதாரவி இருந்தார். எதையும் வெளிப்படையாக பேசுபவர். நடிகர் சங்க தலைவராகவும் இருந்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களிலேயே நடித்து வந்தார்.

அதில் அவருடைய நடிப்பு பெருமளவு பேசப்பட்ட படமாக அமைந்தது பிசாசு திரைப்படத்தில்தான், தன் மகள் ஒரு விபத்தில் இறக்க அவளுடைய ஆவியை பார்த்து கதறி அழும் சீனில் அனைவரையும் அழ வைத்தார் ராதாரவி.

சமீபத்தில் சூர்யா பிறந்த நாள் விழாவில் பேசும் போது 15 வருடங்களுக்கு முன்புவரை எல்லா கெட்டப்பழக்கத்திற்கும் ஆளானேன் என்றும் ஆனால் அதை எல்லாம் விட்டு இப்போது 15 வருடங்கள் ஆகிவிட்டது என்றும் கூறியிருந்தார். அதனாலேயே அவருடைய உடல் நிலை கொஞ்சம் சரியில்லாமல் போனது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி ராதாரவியை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது சின்னவர் படத்தில் கஸ்தூரி நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில்தான் ‘மிஸ் மெட்ராஸ்’ பட்டத்தை வென்றாராம்.

அதன் பிறகு சின்னவர் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் போது கஸ்தூரியை பார்த்து ராதாரவி ‘எத பார்த்தும்மா கொடுத்தாங்க இந்தப் பட்டம்? நீ அழகியா? இல்ல அழுக்கியா?’ என கேட்டாராம். ஆனால் இதை பற்றி கஸ்தூரி வருத்தப்பட்டு கூறவில்லை. அவர் சொல்லும் போது ராதாரவி இந்த மாதிரி சொல்லி கிண்டல் பண்ணிக் கொண்டே இருப்பார் என்றுதான் குறிப்பிட்டிருந்தார்.

Next Story