நான் இருந்தா சும்மா இருக்கமாட்டேன்! நல்ல வேளை வெளிய வந்துட்டேன்..விஜய் அரசியல் பற்றி ராதாரவி கருத்து

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இன்று அரசியலில் தன்னுடைய அடுத்த கட்ட இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறார் விஜய். அதன் முன்னெடுப்பாக பல பணிகளை செய்து கொண்டு வருகிறார். அதன் ஒரு அங்கமாக முதலில் மாணவர்களில் இருந்து தன்னுடைய சேவையை ஆரம்பித்திருக்கிறார்.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாணவர்களின் ஒட்டுமொத்த செல்வாக்கையும் பெற முயற்சித்து வருகிறார். இது அரசியல் ரீதியாக அவர் செய்யாவிட்டாலும் இதுவும் ஒரு ஆரம்பப் புள்ளி என்றே அனைவரும் கூறிவருகிறார்கள்.

வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் நேரடியாக களமிறங்க இருக்கிறார் விஜய். அவரது அரசியல் கொள்கைகள் என்னவாக இருக்கும்? என்ன மாதிரியான திட்டங்களை வைத்திருக்கிறார் என்பது ஒவ்வொன்றாகத்தான் தெரியவரும். இந்த நிலையில் விஜயின் அரசியல் பற்றி பிரபல நடிகர் ராதாரவி அவரது கருத்துக்களை தெரிவித்தார்.

அதாவது விஜய் அரசியலுக்கு வந்தது மிகப்பெருமையாக இருக்கிறது என்று கூறினார். அதாவது சினிமாவை விட்டு அரசியலுக்கு அவர் வந்தாலும் நாங்கள் அரசியலில் இருந்து வெளியே போகும் போது அரசியலுக்குள் எண்ட்ரி ஆகிறார் விஜய். வரட்டும். நல்லதுதான் என்று ராதாரவி கூறினார்.

மேலும் நான் 40 ஆண்டுகாலமாக அரசியலில் இருந்திருக்கிறேன். அதனால் அரசியலுக்குள் இருக்கும் நல்லது கெட்டது என அனைத்துமே எனக்கு தெரியும். அதனால் நான் சும்மாவும் இருக்க மாட்டேன். நான் நல்லவனும் கிடையாது. அதனால்தான் இதை விட்டு விலகுவதுதான் நல்லது என அரசியலில் இருந்து விலகி விட்டேன்.

இந்த நேரத்தில் விஜய் அரசியலுக்குள் வருகிறார். பாலிட்டிக்ஸ் என்றாலே பொது நலன் என்பதுதான் பொருள். நான் அரசியலுக்குள் வந்து பொது நலனை கற்றுக்கொண்டேன் என ராதாரவி கூறினார்.

Next Story