விஜயகாந்த் உடம்பு சரியில்லாம இருந்ததுக்கு… ராதாரவி சொன்ன நெகிழ்ச்சியான தகவல்

Published on: March 18, 2025
---Advertisement---

தமிழ்த்திரை உலகில் ‘கேப்டன்’ என்று எல்லோராலும் புகழப்படுபவர் விஜயகாந்த். அவருடைய படங்களில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் அவ்வளவு தைரியமானவர். நட்பிலும் அவர் இலக்கணமானவர் என்றே சொல்லலாம்.

தான் கடந்து வந்த பாதையை ஒரு போதும் மறக்காதவர். பாசத்துக்கு சொந்தக்காரர். அந்த வகையில் அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும்கூட தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்றும் தனியிடத்தைப் பிடித்துள்ளார்.

captain prabhakaran

captain prabhakaran

கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் நடித்ததில் இருந்து ரசிகர்கள் அவரை கேப்டன் என்றே செல்லமாக அழைக்க ஆரம்பித்தனர். நடிகர் சங்க கடனை அடைக்க அரும்பாடு பட்டு சாதித்தும் காட்டினார். அந்த வகையில் அவர் அனைத்து நடிகர்களுக்கும் பிடித்தமானவர்.

தயாரிப்பாளர்களின் நடிகர் என்றும் சொல்லலாம். அவரை வைத்து யாரும் நஷ்டம் அடைந்தது இல்லை. அந்தவகையில் யாருக்காவது உதவி என்று அவர் கேள்விப்பட்டால் ஓடோடி போய்ச் செய்வார் என்கிறார் அவரது உற்ற நண்பரும் நடிகருமான ராதாரவி. அவர் விஜயகாந்த்தை ‘விஜி’ என்றே அழைப்பார். அவர் விஜயகாந்த் குறித்து என்ன சொல்கிறார்னு பார்க்கலாமா…

விஜயகாந்த் படங்கள்ல நிறைய செய்யாம இருந்துருக்கேன். அதிக படங்களும் நான்தான் செஞ்சிருக்கேன். விஜயகாந்த் மாதிரி நல்லவன் உலகத்துல கிடையாது. எல்லாரும் சொல்றாங்க. சாப்பாடு போட்டாருன்னு. ஆனா அதுமட்டுமல்ல. உதவி வேணுங்கறவங்களுக்கு உதவி செய்வாரு.

நான் வீட்டுல இருக்கேன். என் வீடு வந்து பேங்க்ல ஒரு பிரச்சனையா ஆகிடுச்சு. நான் வாடகை வீட்டுல இருந்தேன். அங்க இருந்து வந்து விஜயகாந்த் என்னைப் பார்க்க வந்தாரு. நட்புல விஜி, வாகை சந்திரசேகர், எஸ்எஸ்.சந்திரன், பாண்டியன், தியாகு எல்லாரும் நல்ல நண்பர்கள்.

இப்போ தியாகு, சந்திரசேகர், நானு தான் இருக்கோம். விஜயகாந்த் இறந்தது எனக்கு ரொம்ப பாதிப்பு. ஆனா அவரு உடம்பு சரியில்லாம இருந்ததுக்கு அவர் இறந்தது பெட்டர். அவங்க மனைவி அவரைப் பார்த்துக்கிட்டு அவருக்கு கடைசியா என்னென்ன பெருமை சேர்க்கணுமோ அதை எல்லாம் செஞ்சிருக்காங்க.

premalatha vijayakanth

premalatha vijayakanth

இப்பவும் அவருக்கு அந்த இடத்துல விஜயகாந்தைப் புதைச்ச உடனே அதை கோயிலா ஆக்கிருக்காங்க. பேரு போட்டுருக்காங்க. கல்யாண மண்டபத்தை மட்டும் நிறுத்திட்டாங்க. மிஸஸ் விஜயகாந்த் இல்லன்னா கஷ்டம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment