அஜித்துக்கும் எனக்கும் செட்டாகாது! அஜித் படம்னு சொன்னதும் தயங்கிய பிரபலம்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:51  )

தமிழ் சினிமாவில் ஒரு நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் அஜித். இவருக்கு என கோலிவுட்டில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். எந்த நடிகர்களுக்கும் இல்லாத அளவுக்கு இவருடைய ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகின்றனர்.

ரஜினி கமல் இவர்களுக்கு அடுத்தபடியாக விஜய் அஜித் இவர்கள்தான் இருக்கிறார்கள். அஜித்துடைய படங்களுக்கு என்றைக்குமே மார்க்கெட்டில் நல்ல ஓபனிங் இருந்து வருகிறது. வருஷத்திற்கு ஒரு படம் என்ற வீதத்தில் நடித்தாலும் வருஷம் முழுவதும் இவரை கொண்டாட கூடிய ரசிகர்கள் ஏராளம்.

அந்த அளவுக்கு அஜித்தின் மார்க்கெட் உயர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் அஜித்தை பற்றிய ஒரு தவறான வதந்தியை நம்பி அஜித் படத்தில் நடிக்க மறுத்து இருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர். அவர் வேறு யாரும் இல்லை 90களில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்த ரகுமான்.

இவர் அஜித் உடன் இணைந்து பில்லா படத்தில் நடித்திருக்கிறார். முதலில் பில்லா படத்தில் நடிக்க மாட்டேன் என கூறினாராம் ரகுமான். ஏனெனில் அந்த படத்திற்கு முன்பு வரை ஒரு பாசிட்டிவான கேரக்டரில் தான் நடித்து வந்தார் ரகுமான். ஆனால் பில்லா படத்தில் நெகட்டிவ் சேடில் அவருடைய கதாபாத்திரம் அமைந்திருக்கும்.

இன்னொரு பக்கம் அந்த சமயத்தில் அஜித்தை பற்றி ஒரு தவறான வதந்தி வெளிவந்ததாம். அதாவது அஜித் மிகவும் திமிர் பிடித்தவர். யாருடனும் அதிகம் பேச மாட்டார். ஓவர் ஆட்டிடியூட் காட்டுவார் என்றெல்லாம் தவறான வதந்தி வந்திருக்கிறது .

இதை அறிந்த ரகுமான் இது நமக்கு செட்டாகாது. அதையும் மீறி அந்த படத்தில் நடிக்கப் போனால் தனக்கும் அஜித்துக்கும் இடையே ஏதாவது மனக்கசப்பு ஏற்பட்டுவிடும் என நினைத்து படத்தில் நடிக்க மாட்டேன் என கூறினாராம். ஆனால் படக்குழுவை சேர்ந்த ஒரு சில பேர் அஜித் அப்படிப்பட்டவர் கிடையாது என்று சொல்லி அவரை நடிக்க வைத்திருக்கின்றனர்.

படத்தில் நடித்த பிறகுதான் ரகுமானுக்கு தெரிந்ததாம் அஜித் எப்பேர்ப்பட்ட மனிதர் என்று. தங்கமான மனசுக்காரர் அஜித் என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் ரகுமான்.

Next Story