அங்க மகள் வாழ்க்கை கேள்விக் குறியா நிக்குது..அம்பானி வீட்ல தலைவரோட ஆட்டத்தை பாருங்க
இன்று அனைத்து துறையை சார்ந்த பல பிரபலங்களும் அம்பானி வீட்டு இல்லத்திருமண விழாவில்தான் கூடியிருக்கிறார்கள். பல மாநில தலைவர்கள், உலக தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என அனைவருமே அம்பானி வீட்டில்தான் கூடியிருக்கிறார்கள். மும்பையில் கோலாகலமாக நடைபெறும் இந்த திருமண வைபோகத்திற்கு பல வகைகளில் பிரபலங்கள் ரெடியாகி வந்திருக்கின்றனர்.
கோலிவுட்டில் இருந்து ரஜினிகாந்த், அட்லீ , ரஹ்மான் போன்றவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் அங்கு சென்றிருக்கிறார்கள். மும்பையில் உள்ள உலக மாநாடு வளாகத்தில்தான் அம்பானி தன் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்துகிறார். கடந்த ஒரு வார காலமாக அதற்கான ஏற்பாடுகள் தட புடலாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தன் மனைவி, இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் குடும்ப சகிதமாக பாரம்பரிய உடையான பட்டுவேட்டி சட்டை அணிந்து மாஸாக கலந்து கொண்டார். இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவெனில் ரஜினிகாந்த் அம்பானி வீட்டில் நடந்த கொண்டாட்டத்தில் பயங்கரமான டான்ஸும் ஆடியிருக்கிறார்.
அது சம்பந்தமான வீடியோதான் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. கூடவே சர்ச்சையும் கிளம்பியிருக்கின்றது. அதாவது தன் மூத்தமகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் நிலையில் அவருடைய வாழ்க்கையே கேள்விக் குறியாகி இருக்கின்றது.
ஆனால் நம்ம தலைவரு இங்க வந்து இப்படி குத்தாட்டம் போடுறாரே என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இருந்தாலும் அந்த வீடியோவில் ரஜினிகாந்த் எந்தளவு தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்துகிறார் என நீங்களே பாருங்கள்.
இதோ அந்த வீடியோ லிங்க: https://www.instagram.com/reel/C9U4KxFI1mN/?igsh=cDVtYXI0ajV0OGd2