Rajinikanth: சினிமாவில் பெரிய நடிகர்களுக்கு மட்டுமே கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும். இப்போதெல்லாம் விஜய், ரஜினியெல்லாம் 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார்கள். அதுவும் விஜய் 200 கோடி சம்பளம் வாங்குகிறார். ஓடிடி, பேன் இண்டியா படங்கள் உருவான பின் 100 கோடி சம்பளம் என்பது சாதாரணமாகிவிட்டது.
கல்கி 2898டி இரண்டு பாகத்திலும் நடிக்க கமலுக்கு 150 கோடி சம்பளம் பேசியிருக்கிறார்கள். நடிகர்களுக்கு பின் நடிகைகளுக்கு அதிக சம்பளம் கொடுப்பார்கள். நடிகர், நடிகைகளுக்கு பின் இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர், படத்தில் நடித்த குணச்சித்திர நடிகர், நடிகைகள் என போகும்.
குணச்சித்திர நடிகர்கள் மற்றும் சில காட்சிகளில் வரும் நடிகர்களுக்கு குறைந்த சம்பளமே கொடுப்பார்கள். ஒருநாள் ஒரு காட்சியில் நடித்துவிட்டு 500 ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலரும் இப்போது சினிமாவில் இருக்கிறார்கள். காலை, மாலை 2 வேளை சாப்பாடு மற்றும் 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்களும் இருக்கிறார்கள்.
அவர்களுக்கு என்ன மார்க்கெட் இருக்கிறதோ அதை பொறுத்து சம்பளம் மாறுபடும். இந்நிலையில்தான், திரைப்பட மற்றும் சீரியல் நடிகர் பூ விலங்கு மோகன் ரஜினியிடம் தனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசியிருக்கிறார். நான் பாபா படத்தில் ஒரு நாள் நடித்தேன். அப்போது ‘டிவி சீரியலில் உங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள்?’ என ரஜினி கேட்டார்.
’8 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள்’ என்றேன். ‘அவ்வளவுதானா?’ என கேட்ட ரஜினி ‘ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடிப்பீர்கள்?’ என கேட்டார். காலையில் போனால் இரவு ஆகிவிடும் என்றேன். ‘ஐயோ. ஒரு நாள் முழுக்க வேலை செய்து இவ்வளவுதானா.. ரொம்ப கஷ்ட்ம்ல’ என சொல்லிவிட்டு நடிக்க போய்விட்டார்.
ஒரு மாதம் கழித்து அந்த படத்தில் நான் நடித்ததற்கான சம்பளம் செக்காக வந்தது. அதில் 8 ஆயிரம் என எழுதப்பட்டிருந்தது. நான் அதிர்ச்சியாகி போனேன். டிவியில் எனக்கு என்ன சம்பளமோ அதையே கொடுத்திருந்தார் ரஜினி. பாபா படத்திற்கு ரஜினிதான் தயாரிப்பாளர். நடிகரை தாண்டி அவர் ஒரு பக்கா பிஸ்னஸ் மேன் என சொல்லியிருக்கிறார் பூ விலங்கு மோகன்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…