அந்த எளிமைதான் சார் சூப்பர் ஸ்டார்! ‘வேட்டையன்’ செட்டில் ரஜினி எங்க இருக்காரு பாருங்க
தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். யாரிடமும் சகஜமாக பேசக் கூடியவர். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தாலும் அங்கு இருக்கும் அனைத்து டெக்னீசியன்கள் சக நடிகர்கள் என அனைவருக்கும் தானாகவே முன்வந்து தன்னுடைய வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் சொல்ல கூடியவர்.
அது தன்னைவிட சின்ன நடிகராக இருந்தாலும் சரி. இள வயது நடிகர்களாக இருந்தாலும் சரி. மிகவும் பணிவன்புடன் தன்னுடைய வாழ்த்துக்களை கூறுபவர். அதைப்போல அந்த காலத்தில் பாலச்சந்திரன் மகேந்திரன் போன்ற மாபெரும் இயக்குனர்களுக்கு எந்த அளவுக்கு மரியாதை கொடுத்தார் என்பது அனைவருக்குமே தெரியும்.
அந்த ஒரு மரியாதையை இன்று வரை தன்னுடைய பட இயக்குனர்களுக்கு கொடுத்து வருகிறார் ரஜினிகாந்த். இப்போது இள இயக்குனர்களுடன் பணி புரிந்து வரும் ரஜினிகாந்த் அவர்களையும் என்னுடைய இயக்குனர் என மிக உரிமையாக அழைப்பதை நாம் பார்த்து வருகிறோம்.
அதுபோல ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர்கள் வரும்போதும் போகும்போதும் இன்று வரை எழுந்து மரியாதை கொடுத்து வருவதாகவும் அவருடன் நெருங்கி பழகிய சில பேர் கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். இந்த நிலையில் இவரின் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் வேட்டையன்.
படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. த ச ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ராணா அமிதாப்பச்சன் பகத் பாசில் மஞ்சு வாரியர் துஷாரா விஜயன் அபிராமி போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.
இந்த நிலையில் வேட்டையன் படப்பிடிப்பில் ரஜினியும் ராணாவும் அமர்ந்திருக்கும் ஒரு வீடியோ இப்போது வைரலாகி விடுகின்றது. அது சாதாரணமான வீடியோவாக இருக்கலாம். ஆனால் அந்த வீடியோவை பார்க்கும் பொழுது ராணா ஒரு நாற்காலியில் அமைந்திருப்பது மாதிரியும் பக்கத்தில் ரஜினி ஒரு ஸ்டூலில் அமர்ந்திருப்பது மாதிரியும் இருக்கிறது.
மற்ற நடிகர்களை பொறுத்த வரைக்கும் பெரிய நடிகர்களாக இருக்கும் பட்சத்தில் தனக்கு இணையாக வேறு எந்த நடிகரும் உட்காரக் கூடாது என நினைப்பார்கள். ஆனால் ரஜினி அதுவும் இந்த வீடியோவில் பார்க்கும் பொழுது ஒரு சாதாரண ஸ்டூலில் அமர்ந்திருப்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் நினைத்திருந்தால் எனக்கு அந்த மாதிரி நாற்காலி வேண்டும் இந்த மாதிரி வேண்டும் என்று கேட்டிருக்கலாம். ஆனால் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என நினைத்து உட்கார்ந்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/RajiniGuruRG/status/1844633292412264675