எந்த தாத்தாவும் செய்யாத உலக சாதனை! வைரலாகும் ரஜினியின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கலாய்
தமிழ் சினிமாவில் ஒரு லட்சிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். 70 களில் ஆரம்பித்த தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக இன்று வரை தொடர்ந்து கொண்டு வருகிறார். அவருடைய பொன்விழா ஆண்டை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடவேண்டும் என கோலிவுட்டில் பல பேர் பேசிக் கொண்டு வருகிறார்கள். அந்தளவுக்கு ரஜினி பல சாதனைகளை படைத்தவர்.
எங்கேயோ ஒரு மூலையில் கிடந்தவரை அடையாளம் கண்டு கோலிவுட்டிற்கு அழைத்து நடிக்க வைத்து இன்று ஒரு மாபெரும் நடிகராக மாறியிருக்கிறார் என்றால் அதற்கு காரணமாக இருந்தவர் கே.பாலசந்தர். பாலசந்தர் அமைத்துக் கொடுத்த பாதைதான் இன்று வரை ஒரு வெற்றிப்பாதையாக அமைந்து வருகிறது.
70 வயதை கடந்தும் ரஜினியின் ஸ்டைல், மாஸ் என எதிலும் குறையில்லாமல் ரசிகர்களுக்கான தேவையான அந்த புத்துணர்ச்சியை கொடுத்துக் கொண்டே வருகிறார் ரஜினி. இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு இணையாக போட்டி போடும் அளவுக்கு இன்னமும் அதே தெம்புடன் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை போட்டு வைரலாக்கியிருக்கிறார். அதாவது சௌந்தர்யா ரஜினிகாந்தின் மகன் இன்று பள்ளிக்கு போகமாட்டேன் என அடம் பிடித்தாராம். உடனே ரஜினி நான் அழைத்துக் கொண்டு போகிறேன் என கூறி அவரே பள்ளிக்கு அழைத்துக் கொண்டு சென்றாராம்.
அதுமட்டுமில்லாமல் தன் பேரன் அறைக்கே சென்று அங்கு உள்ள மற்ற குழந்தைகளையும் ரஜினி பார்த்து சந்தோஷப்படுத்தியிருக்கிறார். இதை பற்றி சௌந்தர்யா மேலும் ‘ஸ்கிரீனுக்கு வெளியேயும் சரி ஸ்கீர்ன்லயும் சரி என்ன பண்ணாலும் அதில் அவர்தான் கிங், லவ் யூ அப்பா’ என பதிவிட்டிருக்கிறார் சௌந்தர்யா.
இதை பார்த்த ரசிகர்கள் பலர் இதை பாராட்டினாலும் சில பேர் எந்த தாத்தாவும் செய்யாத உலக சாதனை. இதெல்லாம் ஒரு செய்தியா என்றவாறு கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.