நெல்சனுக்கு இப்படி ஒரு கண்டிஷனை போட்ட ரஜினி!.. சூப்பர் ஸ்டாரோட உண்மையான முகம் இதுதான்..

by ramya suresh |
நெல்சனுக்கு இப்படி ஒரு கண்டிஷனை போட்ட ரஜினி!.. சூப்பர் ஸ்டாரோட உண்மையான முகம் இதுதான்..
X

Actor Rajinikanth: தமிழ் சினிமாவில் இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து நடித்து வருகின்றார் நடிகர் ரஜினிகாந்த். வயது எந்த ஒரு விஷயத்துக்கும் தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சுறுசுறுப்பாக படங்களில் நடித்து வருகின்றார் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வேட்டையன்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. படம் 250 கோடி வசூல் செய்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் பிப்ரவரி மாதத்துடன் முழு படப்பிடிப்பும் முடிவடைய இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த படத்தில் அனைத்து மொழிகளை சேர்ந்த சினிமா பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் பாலிவுட் நடிகர் அமீர் காணும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்த திரைப்படத்தை முடித்த கையோடு மார்ச் மாதத்தில் இருந்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே நெல்சன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்த திரைப்படம் ஜெயிலர்.

இந்த திரைப்படத்தின் 2வது பாகம் தற்போது தொடங்க இருக்கின்றது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருந்தது. மேலும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் அனௌன்ஸ்மெண்ட் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பு பெற்றது. இந்த டீசரில் நடிகர் ரஜினிகாந்துக்கு டூப் போட்டு எடுக்கப்பட்டிருக்கின்றது என்று வதந்திகள் பரவி வந்து நிலையில் அதற்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்ததும், கமலஹாசனும் நெருங்கிய நண்பர்கள் என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருவார்கள். அதேபோல் தான் இருவரும் எங்கு சென்றாலும் நாங்கள் மிகச்சிறந்த நண்பர்கள் என்பதை எப்போதும் காட்டிக் கொள்வார்கள். சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

இதனை பொறுத்துக் கொள்ளாத ரஜினிகாந்த் அதே போல ஒரு திரைப்படத்தை நாமும் கொடுக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் இயக்குனர் நெல்சனை வைத்து அதே அப்பா, மகன் சென்டிமென்ட் கதையை இயக்கி இருக்கின்றார். ஆரம்ப காலகட்டத்தில் தொடர்ந்து பல பிளாக்பஸ்டர் கொடுத்த ரஜினிகாந்த் கமலஹாசன் கொடுத்த ஒரு ஹிட் படத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் இப்படி ஒரு செயலை செய்து இருக்கின்றார்.

ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் தான் ஆனால் ஏன் வேட்டையின் திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக உங்களால் மாற்ற முடியவில்லை என்று சினிமா விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்.

Next Story