நேரில் கூப்பிட்டு பாராட்டிய ரஜினி!.. அஸ்வத் மாரிமுத்து போட்ட எமோஷனல் பதிவு!...

by சிவா |
நேரில் கூப்பிட்டு பாராட்டிய ரஜினி!.. அஸ்வத் மாரிமுத்து போட்ட எமோஷனல் பதிவு!...
X

Aswath marimuthu: குறும்படங்களை இயக்கி வந்தவர் அஸ்வத் மாரிமுத்து. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கூட இவர் கலந்துகொண்டார். இவரின் சில குறும்படங்கள் அதில் ஒளிபரப்பப்பட்டது. அதில், சில குறும்படங்கள் வெற்றி பெற்று விருதையும் பெற்றது.

ஒருமுறை இவரின் குறும்படம் வெற்றி பெறவில்லை. ஆனால், அதைப்பார்த்த இயக்குனர் வெற்றிமாறன் ‘இந்த பையன் ஒரு நல்ல ரைட்டரா வருவான்’ என சொல்லியிருக்கிறார். அதை பின்னாளில் நிரூபித்தும் காட்டினார் அஸ்வத் மாரிமுத்து. இவரின் ஒரு குறும்படத்தில் அசோக் செல்வனும் நடித்திருக்கிறார்.

அந்த பழக்கத்தில்தான் அஸ்வத் இயக்கிய முதல் படமான ‘ஓ மை கடவுளே’ படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம் உருவானது. கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.

இதுவரை இப்படம் 100 கோடி வசூலை தாண்டியிருக்கிறது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இப்படம் ஹிட் அடித்திருக்கிறது. இந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு இப்படம் நல்ல லாபத்தையும் கொடுத்திருக்கிறது. இந்நிலையில்தான், ரஜினியிடம் பாராட்டை வாங்கியிருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து.

லவ் டுடே படத்தை பார்த்துவிட்டு பிரதீப் ரங்கநாதனை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார் ரஜினி. இப்போது டிராகன் படத்தை பார்த்துவிட்டு அஸ்வத் மாரிமுத்துவை நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து ‘என்ன மாதிரியான ரைட்டிங் அஸ்வத்.. பெண்டாஸ்டிக்’ . நல்ல படம் பண்ணனும், படத்தை பார்த்து ரஜினி சார் வீட்டுக்கு கூப்பிட்டு விஸ் பண்ணி நம்ம படத்தை பாராட்டி பேசணும். இது டைரக்டர் ஆகணும்னு கஸ்டபட்டு உழைக்கும் ஒவ்வொரு உதவி இயக்குனரோட கனவு.. கனவு நிறைவேறிய நாள் இன்று.. நீங்கள் பேசிய எல்லாவற்றுக்கும் நன்றி சார்’ என நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார்.

வழக்கமாக இளம் இயக்குனர் ஹிட் படம் கொடுத்தால் ரஜினி அவரை கூப்பிட்டு பாராட்டி ‘நமக்கும் ஒரு கதை ரெடி பண்ணுங்க’ என சொல்லுவார். அப்படி அஸ்வத்திடம் சொன்னரா தெரியவில்லை.

Next Story