ரமேஷ் கண்ணாவுக்கு இளையராஜா கொடுத்த ஒரு லட்சம்!.. செம காமெடி ஸ்டோரி!….

Published on: March 18, 2025
---Advertisement---

Ramesh khanna: இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் ரமேஷ் கண்ணா. 40 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் இருக்கிறார். 80களிலேயே சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். உதவி இயக்குனர், வசனகர்த்தா, இயக்குனர், குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர் என பல திறமைகள் கொண்டவர் இவர்.

நாடக அனுபவம்: சென்னையில் பிறந்து வளர்ந்தவர் இவர். 5 வயதிலேயே பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ்.மனோகரின் நாடக குழுவில் நடித்திருக்கிறார். 10 வயதிற்குள் சுமார் ஆயிரம் நாடகங்களில் நடித்தவர் இவர். இதற்காக ஜனாதிபதியிடம் பாராட்டை பெற்றார். பாண்டியராஜன், கோடி ராமகிருஷ்ணா, விக்ரமன் ஆகியோரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார்.

நடிகராக வளர்ச்சி: கே.எஸ்.ரவிக்குமாருக்கு மிகவும் பிடித்த உதவி இயக்குனர் இவர். 90களில் சினிமாவில் நடிக்க துவங்கினார். விக்ரம் இயக்கிய உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் கார்த்திக்கின் நண்பராக நடித்தது இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. விஜய், சூர்யா இணைந்து நடித்த ஃபிரண்ட்ஸ் படத்திலும் அவர்களின் நண்பனாக நடித்திருப்பார். படையப்பா படத்தில் ரஜினியின் நண்பர்களில் ஒருவராக வருவார். அமர்க்களம் படத்தில் அஜித்துடன் நடித்திருப்பார்.

இயக்குனர் அவதாரம்: 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடிப்பார். சில தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அஜித் – தேவயாணி ஆகியோரை வைத்து தொடரும் என்கிற படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றியடையவில்லை. சூர்யா நடித்த ஆதவன் படத்தின் கதை இவருடையதுதான். முனி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார்.

இளையராஜா: சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ரமேஷ் கண்ணா இளையராஜாவுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். நான் வேலை செய்த ஒரு படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அப்போது அவரின் ரிக்கார்டிங் தியேட்டரில் நான் இருந்தேன். திடீரென ஒரு பொட்டலத்தை என்னிடம் கொடுத்து ‘இதை நீ வைத்துக்கொள்’ என சொல்லிவிட்டு போய்விட்டார்.

பிரித்துப்பார்த்தால் அதில் ஒரு லட்சம் பணம் இருந்தது. அப்போது அது பெரிய தொகை. எனக்கு தினமும் பேட்டாவே 10 ரூபாய்தான். எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ஒரு கடைக்கு சென்று டீ கூட குடிக்க முடியவிலை. வெளியே போகவும் முடியவில்லை. அப்போது வந்த இளையராஜா சிரித்துக்கொண்டே ‘என்ன டென்ஷன் ஆயிட்டியா?’ என கேட்டுவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு போய்விட்டார். அதன் பின்னரே எனக்கு நிம்மதி வந்தது’ என சொல்லியிருந்தார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment