தப்பு தப்பா போட்டுட்டு இருக்கீங்க! மகள் திருமண விருந்தில் பத்திரிக்கையாளரை எச்சரித்த சரத்குமார்

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 18:58:24  )
தப்பு தப்பா போட்டுட்டு இருக்கீங்க! மகள் திருமண விருந்தில் பத்திரிக்கையாளரை எச்சரித்த சரத்குமார்
X

தமிழ் சினிமாவில் ஒரு சுப்ரீம் ஸ்டார் ஆக இன்றுவரை மக்கள் மனதில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர் சரத்குமார். 90களில் இருந்து தன்னுடைய ஆக்சன் சார்ந்த நடிப்புகளாலும் அசாத்திய நடிப்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்ற ஒரு ஹீரோவாக சூப்பர் ஹிட் ஸ்டாராக இருந்து வந்த சரத்குமார் சமீப காலமாக குணச்சித்திர நடிகர் ஆகவும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களிலும் நடித்து இன்றளவும் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தான் இவருடைய மகள் வரலட்சுமியின் திருமணம் தாய்லாந்தில் உறவினர்கள் முன்னிலையில் மிக விமர்சையாக நடந்து முடிந்தது. அதற்கு முன்னதாக இவர்களுடைய வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

மும்பையைச் சேர்ந்த நிக்கோலை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் வரலட்சுமி சரத்குமார். தாய்லாந்தில் கிராப்பில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் இவர்களுடைய திருமண விழா நடைபெற்றது. சமீபத்தில் தான் தனது மகள் திருமண விருந்தாக பத்திரிகையாளர்களுக்கு பிரியாணியுடன் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்திருந்தார் சரத்குமார்.

ஏராளமான பத்திரிகையாளர்கள் அதில் கலந்து கொண்டனர். அப்போது விருந்து நடைபெறும் இடத்தில் அனைவரையும் சிறப்பாக கவனித்துக் கொண்ட சரத்குமார் நேராக ஒரு நிருபரிடம் வந்து எச்சரிக்கும் விதமாக அவருடைய கருத்தை தெரிவித்து சென்றார்.

அதாவது அந்த நிரூபரை பார்த்து சரத்குமார் 'பாஸ் நம் சந்தித்து பேச வேண்டும். தனியாக உங்களிடம் நிறைய பேச வேண்டும்.என்னை பற்றி நிறைய செய்திகள் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அதை குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்.

பாசிட்டிவாக இருங்கள். என்னை ஆரம்பத்திலிருந்து உங்களுக்கு நன்றாக தெரியும். என்னுடைய பயணம் என்ன என்பதும் என் கூடவே இருந்த நீங்கள் பார்த்து வருகிறீர்கள். அதனால் இனிமேல் இப்படி எழுதுவதை குறைத்துக் கொள்ளுங்கள்' என அந்த நிரூபரை பார்த்து சொல்லிவிட்டு சென்றார்.அந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Next Story