ஆனந்த் அம்பானிக்கு ஷாருக்கான் கொடுத்த திருமண பரிசு!.. இவ்வளவு கோடி மதிப்பா?!..
இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் இவர். இவரின் ரிலையன்ஸ் நிறுவனம், செல்போன், சூப்பர் மார்க்கெட், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பல தொழில்களிலும் முதலீடு செய்திருக்கிறது. இந்தியா முழுவதும் ரிலையன்ஸின் ஜியோ நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டு பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுவாக அம்பானி குடும்பத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு போகும். அதிலும், பல கேட்டகிரிகள் இருக்கிறது. வருடத்திற்கு இத்தனை கோடிகளுக்கும் மேல் சம்பாதிப்பவர்களுக்கு மட்டுமே அழைப்பு போகும். நடிகர், நடிகைகளும் கௌரவத்திற்காக இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வார்கள்.
அப்படித்தான் சமீபத்தில் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மும்பையில் நடந்தது. இந்த திருமண விழாவில் பாலிவுட்டின் சீனியர் நடிகர் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், ரன்வீர் சிங், சாஹித் கபூர், ஜான்வி கபூர், வித்யா பாலன், ரன்பீர் கபூர், ஆலியா பட உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
அதேபோல், கோலிவுட்டிலிருந்து நடிகர் ரஜினி காந்த் அவரின் மனைவி லதா, சூர்யா, அவரின் மனைவி ஜோதிகா, இயக்குனர் அட்லி மற்றும் அவரின் மனைவி பிரியா உள்ளிட்ட பலரும் அந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். திருமண விழாவில் பல இசைக்கச்சேரிகளும் நடந்தது.
ஏ.ஆர்.ரஹ்மானும் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினார். மேலும் வெளிநாட்டில் பிரபலமான சில இசைக்கலைஞர்களும் கலை நிகழ்ச்சி நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடனமாடிய வீடியோவும் இணையத்தில் வைரலானது. இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பிரபலங்களுக்கு பல கோடிகள் கொடுக்கப்பட்டதாகவும், சிலருக்கு 2 கோடி மதிப்புள்ள வாட்ச் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், ஆனந்த் அம்பானிக்கு திருமண பரிசாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் 40 கோடி மதிப்புள்ள ஒரு அபார்ட்மெண்டை வழங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகையும் வாயடைக்க வைத்திருக்கிறது.