100 கோடி சம்பளம் வாங்கினாலும் நீ விஜய் ஆக முடியாது!.. எஸ்.கே.வை அட்டாக் பண்ணும் நடிகர்...

Sivakarthikeyan: கோட் படத்தின் இறுதிக்காட்சியில் சிவகார்த்திகேயனிடம் துப்பாக்கியை கொடுக்கும் காட்சி ஒன்று வரும். அதற்கு சிவகார்த்திகேயன் ‘நீங்க ஏதோ அவசர வேலையா போறீங்க.. நான் பாத்துக்கிறேன்’ என்பார். இது படத்தில் வரும் காட்சி என்றாலும் இதை நிஜ வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்துக்கொண்டார்கள் ரசிகர்கள்.
அரசியலுக்கு போகும் விஜய்: ஏனெனில், விஜய் இன்னும் ஒரு படத்தோடு சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபடப்போகிறேன் என கூறியுள்ளார். அதோடு, அவர் நடித்த படம் துப்பாக்கி. அந்த துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கையில் கொடுக்கவே தனது இடத்தை விஜய் அவருக்கு கொடுத்துவிட்டு செல்வது போல ரசிகர்கள் புரிந்துகொண்டார்கள்.
கோட் படத்தில் துப்பாக்கி: இதற்கு விளக்கம் கொடுத்த சிவகார்த்திகேயன் ‘விஜய் சாரோடு அப்படி நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. மற்றபடி அவரின் இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் எனக்கு இல்லை’ என சொல்லியிருந்தார். ஆனால், யாரும் அதை ஏற்கவில்லை. சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட ஒரு விழாவில் மேடையில் இருந்த லோகேஷ் கனகராஜிடம் ‘எப்போது சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவீர்கள்?’ என கேட்டதற்கு ‘அதான் துப்பாக்கியை வாங்கிட்டாரே. சீக்கிரம் பண்ணிடுவோம்’ என சொல்லி சிரித்தார் லோகேஷ்.
விஜயின் 30 வருட உழைப்பு: விஜய் அரசியலுக்கு போனால் அவருக்கு அடுத்து அஜித் இருக்கிறார். ஆனால், அவரின் ஸ்டைல் வேறு. எனவே, மற்ற நடிகர்கள் விஜயின் இடத்தை பிடிக்க ஆசைப்படுவார்கள். இது நடக்கும். ஆனால், இந்த இடத்திற்கு வருவதற்கு விஜயின் 30 வருட உழைப்பு இருக்கிறது. ரஜினி இடத்தை எப்படி யாராலும் பிடிக்க முடியாதோ அப்படி விஜயின் இடத்தையும் யாராலும் பிடிக்க முடியாது என்றே சினிமா பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள்.
விஜய் ஆக முடியுமா: இந்நிலையில், நடிகரும் விஜயின் நட்பு வட்டாரத்தில் இருப்பவருமான ஷாம் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் என பலரும் சொல்லிக்கிட்டு இருக்காங்க. ஆனால், அவருக்கே அந்த ஆசை இல்லை. விஜய் அண்ணாவின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. ஆனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிவாவுக்கு ஒரு வரவேற்பு இருக்கு. ஆனால், அதுக்காக அவர் அடுத்த தளபதி ஆகிவிட முடிட்யாது. நீங்க 100 கோடி சம்பளம் கூட வாங்கலாம். ஆனா, விஜய்யாக முடியாது’ என சொல்லியிருக்கிறார்.
விஜய் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனரஞ்சகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்தவுடன் முழு நேர அரசியலில் இறங்கவுள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படம் என பெரிய பெரிய இயக்குனர்களை பிடித்து படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். விஜயின் இடத்தை சிவா பிடிப்பாரா என்பது இன்னும் சில வருடங்களில் தெரிந்துவிடும்.