தங்கச்சி திமுக! அண்ணன் தவெக.. கட்டப்பா வீட்டில் என்னப்பா நடக்குது.. ஒரே குழப்பமா இருக்கே..

Actor Vijay: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார், நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் தொடர்ந்து கட்சி வேலைகளையும் கவனித்து வருகின்றார் நடிகர் விஜய்.
அந்த வகையில் நேற்று முழுவதும் சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்டிங்கில் இருந்தது நடிகர் விஜய் தான். காஞ்சிபுரம் அடுத்து இருக்கும் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அங்கு விமான நிலையம் வேண்டாம் என்று கூறி பகுதியைச் சேர்ந்த மக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். விமான நிலையத்திற்காக விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தக் கூடாது என தொடர்ந்து எதிர்ப்பு வந்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக குரல் கொடுத்து நேற்று மக்களை சந்திப்பதற்கு சென்றிருந்தார். வாகனத்தில் இருந்தபடியே மக்களை சந்தித்து பேசினார். அப்போது தெரிவித்திருந்ததாவது 'விமான நிலையம் வரக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. விவசாய நிலங்கள் இருக்கும் பகுதியில் வரக்கூடாது என்பதுதான் எங்களின் கோரிக்கை.
பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் மறு ஆய்வு செய்ய வேண்டும். இப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு நானும் என் கட்சியினரும் எப்போதும் உறுதுணையாக இருப்போம். கட்சி தொடங்கி எனது முதல் களப்பயணம் பரந்தூரிலிருந்து துவங்கின்றது' என்று கூறியிருந்தார். இவரின் பேச்சுக்கு தொடர்ந்து ஒரு பக்கம் ஆதரவும் எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜய்யின் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் கூத்தாடி கேப்சன் போட்டு பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்கள். திரையுலகில் நடித்துக் கொண்டிருக்கும் நபர்களை கூத்தாடி என்று மோசமாக விமர்சித்து வரும் நிலையில் அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால் மக்களை மகிழ்விக்க கூத்து கட்டும் கலைஞர்கள் எப்போதும் மதிப்புக்குரியவர்கள் தான் என்று நடிகர் விஜய்யும் திரையுலகை சேர்ந்தவர்களும் கூறி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சிபிராஜ் சமூக வலைதள பக்கத்தில் நடிகர் கூத்தாடி என்று எழுதி வைத்திருக்கிறார். மேலும் நடிகர் விஜய் வீட்டில் இருந்து கொண்டே அரசியல் செய்து வருகின்றார் என்று தொடர்ந்து கிண்டல் செய்து வந்த நிலையில் தற்போது களஅரசியலை நடிகர் விஜய் தொடங்கி இருக்கின்றார் என்று அவரை கிண்டல் செய்தவர்களுக்கு நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க சத்யராஜின் மகள் திவ்யா நேற்று முன்தினம் திமுகவில் இணைந்திருந்தார். திமுக கட்சியில் இணைந்த பிறகு திவ்யா இங்கு பலரும் போட்டோ அரசியல் செய்கிறார்கள் ஆனால் கள அரசியல் செய்ய வேண்டும் என்று விஜய் மறைமுகமாக விமர்சித்து பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் தற்போது அவரின் அண்ணன் சிபிராஜ் விஜயை ஆதரித்து அவரின் புகைப்படத்தை பகிர்ந்து கூத்தாடி என்று கூறி இருக்கின்றார். ஒரு பக்கம் தங்கை திமுகவில் இணைந்துள்ள நிலையில் அண்ணன் சிபிராஜ் விஜயின் கட்சியில் இணையப் போகின்றாரா? என்று சமூகவலைதள பக்கங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.