ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல!.. ஆனா லிஸ்ட பாத்தீங்களா?.. சாய் அபயங்கருக்கு கொட்டும் வாய்ப்பு..

Sai Abhyankkar: இந்திய சினிமாவில் பிரபல பாடகராக இருந்து வரும் திப்பு மற்றும் ஹரிணி தம்பதியினரின் மகன் சாய் அபயங்கர். 21 வயதாகும் இவர் சென்னையில் ஐஐடி கல்லூரியில் படித்து வருகின்றார். இருப்பினும் தனது பெற்றோர்களைப் போலவே இசை மீது அதிக ஆர்வம் கொண்ட சாய் அபயங்கர் தொடர்ந்து பாடல் எழுதுவது, இசையமைப்பது போன்றவற்றிலும் அதிக ஆர்வம் காட்டி வந்திருக்கின்றார்.
முதல் பாடல் ஹிட்: இசையின் மீது இருந்த ஆர்வம் காரணமாக புதுப்புது ட்யூனை போட்டு இசையமைத்து வந்த சாய் அபயங்கர் ஆல்பம் பாடலை இசையமைத்தார். அந்த வகையில் முதன்முதலாக 'கட்சி சேரா' என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடல் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
2024 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பாடல் பட்டியலில் இந்த பாடலும் இருந்தது. கட்சி சேரா பாடல் 194 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இரண்டாவதாக ஆசை கூட என்கின்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடலும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
சித்திர புத்திரி பாடல்: தொடர்ந்து இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் கடைசியாக சித்திர புத்திரி என்ற ஆல்பம் பாடலை வெளியிட்டு இருந்தார். இந்த பாடலில் சாய் அபயங்கர் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடித்திருந்தார்கள். இப்பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இப்படி தொடர்ந்து ஆல்பம் பாடல்கள் மூலமாக வெற்றி மேல் வெற்றி கொடுத்து வருகின்றார் சாய் அபயங்கர்.
கைவசம் ஏகப்பட்ட படங்கள் : தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக வளம் வரும் அனிருத் அவர்களிடம் சில படங்களில் பணியாற்றிய சாய் அபயங்கர் தற்போது இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கின்றார். அந்த வகையில் தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் என்கின்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகி இருக்கின்றார்.
லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி, நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி வரும் சூர்யா 45 திரைப்படத்திலும் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் கமிட்டாகி இருக்கின்றார். முதலில் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருந்த நிலையில் பின்னர் அவருக்கு பதிலாக சாய் அபயங்கர் இசையமைத்து வருகின்றார்.
அதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் சாய் அபயங்கர் தான் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றது. இது தமிழில் கமிட்டான திரைப்படங்கள். இது இல்லாமல் மலையாளத்தில் ஒரு திரைப்படத்திலும், ஹிந்தியில் ஒரு திரைப்படத்திலும் இசையமைக்க இருப்பதாக கூறி வருகிறார்கள்.
எஸ்டிஆர் 49 படம்: பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் எஸ்டிஆர் 49 திரைப்படத்திற்கும் சாய் அபயங்கர் தான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகின்றது. முதலில் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருந்த நிலையில் தற்போது அவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருவதால் சாய் அபயங்கர் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.