கமல், சிம்பு நடிக்க மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் தக் லைஃப். படத்திற்கு நெகடிவ் கமெண்டுகள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் படத்தில் சிம்பு உள்ளே வந்தது எப்படின்னு பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்னன்னு பாருங்க.
விக்ரம் படத்தோட வெற்றிக்குப் பிறகு கமலும், மணிரத்னமும் இணைந்து படம் பண்ணலாம்னு நினைச்சாங்க. அதுதான் தக் லைஃப். இந்தப் படத்துல கமல் மட்டுமே ஹீரோவா நடிப்பதாக இருந்தது. அப்புறம் கதைக்குள்ள சின்ன சின்ன மாற்றங்களைக் கொண்டு வந்தாங்க. ஜெயம் ரவி நடிப்பதாக இருந்தது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததை வைத்து ஜெயம் ரவியை நடிக்க வைக்க மணிரத்னம் கேட்டாராம். கதையைக் கேட்ட ஜெயம் ரவி எனக்குக் கேரக்டர் பெரிசா இல்லன்னு சொல்லி மறுத்துவிட்டாராம். பொன்னியின் செல்வன் படத்திலேயே முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்ததாம்.
அவர் நடிச்சா நாங்க நடிக்கலன்னு பல முக்கிய நடிகர்கள் விலகி விட்டார்களாம். அப்புறம் சிம்பு நாமே விலகிக்கொள்ளலாம்னு பெருந்தன்மையாக விலகி விட்டாராம். அந்த வகையில் செக்கச் சிவந்த வானம் படத்தில் இருந்து மணிரத்னம் உடன் சிம்பு டிராவல் பண்ணி வருகிறார். அதனால சிம்புவை நடிக்க வைக்கலாம்னு மணிரத்னம் கேட்டாராம். ரொம்ப சின்ன கேரக்டரா இருக்கேன்னு சிம்பு சொல்ல, இதை நான் டெவலப் பண்றேன்னு மணிரத்னம் சொன்னாராம்.
அப்புறம் கமல், மணிரத்னம் இணைந்து பேசினார்களாம். சிம்புவை நாம பயன்படுத்தினா இந்தப் படத்துக்கு பெரிய வியாபாரம் ஆகும்னு பேசிருக்காங்க. அதனால சிம்பு ஓகே ஆனார்.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல் சிம்புவை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க விரும்பினார். அந்தப் படத்துக்கு பெரிய பட்ஜெட். சிம்பு தாக்குப்பிடிப்பாரா? அதுக்கு ஏற்ற வியாபாரம் ஆகுமான்னு அவருக்கு சந்தேகம் வர படம் டிராப் ஆனது. அப்போது ‘அந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்’னு சிம்பு கமலிடம் என்ஓசி கேட்டுள்ளார்.
‘அதற்கு ஆகும் செலவை நானே தருகிறேன்’னு சொல்ல கமல் ‘பரவாயில்ல… வேணாம்’னு மறுத்து விட்டாராம். இந்த சூழலில் கமல் ‘மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிக்கிறீங்களா’ன்னு கேட்க சிம்புவும் ‘ஓகே’ சொன்னாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…