வெற்றிமாறன் கதையில் சிம்பு!.. டைரக்டர் யார் தெரியுமா?.. சுத்தமா சிங்க் ஆகலையே!..

நடிகர் சிம்பு:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. தமிழ் சினிமாவில் இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருக்கின்றது. சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தபோது இடையில் காதல் சர்ச்சை, நடிகர் சங்கத்தின் ரெட் கார்டு பிரச்சனை போன்றவற்றில் சிக்கி தவித்து வந்த சிம்பு தற்போது தான் உண்டு தன் வேலை உண்டு என்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
மாநாடு படத்திற்கு பின்பு:
தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வந்த சிம்பு மாநாடு திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கின்றார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து வெளியான வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல போன்ற படங்கள் சிம்புவிற்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் கமலஹாசன் உடன் இணைந்து நடித்து வருகின்றார்.
அதற்கு முன்னதாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். ஆனால் அப்படத்தின் பட்ஜெட் பிரச்சனை காரணமாக கமல்ஹாசனின் நிறுவனம் விலகிய நிலையில் தற்போது புதிய தயாரிப்பாளர்களை தேடி வருகிறார்கள். இந்த திரைப்படத்தை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்கின்ற முயற்சியில் நடிகர் சிம்பு இறங்கி இருக்கின்றார்.
இது ஒரு புறம் இருக்க அடுத்ததாக அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அடுத்த கட்டமாக இப்படத்தில் தான் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியிருக்கின்றது.
வெற்றிமாறன் கதை:
சினிமாவில் அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி வரும் சிம்பு தற்போது வெற்றிமாறன் கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது வெற்றிமாறன் கதை, திரைக்கதை, வசனத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும், அந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்கப் போவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்கள் வெற்றியை கொடுத்த நிலையில் மீண்டும் சிம்பு கௌதம் மேனனுடன் இணைய இருப்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.