Categories: Cinema News latest cinema news latest news str49

Simbu: சிம்புவுக்கு வந்த திடீர் ஆர்வம்!.. எல்லாத்துக்கும் கமல்தான் காரணம்!..

STR49: சின்ன வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரின் அப்பா டி. ராஜேந்தர் இவரை சிறுவயதிலேயே சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். சின்ன வயதிலேயே ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் சிம்பு. அதன் பின் பல படங்களிலும் நடித்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாறினார். நன்றாக பாடுவார், நன்றாக ஆடுவார், நன்றாக நடிப்பார், டைரக்‌ஷன் கூட தெரியும், இசை அறிவு உண்டு என சிம்புவிடம் நிறைய பிளஸ் இருந்தாலும் ஷூட்டிங்கிற்கு சரியாக போக மாட்டார் என்கிற மைனஸ் இவர் மீது இருக்கிறது.

‘நான் சரியான நேரத்திற்கு போனாலும் இயக்குனர்கள் சரியான நேரத்தில் ஷூட்டிங்கை நடத்துவதில்லை. மணிரத்தினம் சார் சரியாக திட்டமிட்டு சரியான நேரத்தில் படமெடுப்பார். என்னை காக்க வைக்க மாட்டார். அதனால் அவரின் ஷூட்டிங்கிற்கு நான் சரியாகத்தான் போகிறேன். இயக்குனர்கள் மீதுதான் தவறு’ இது பற்றி விளக்கமும் அளித்தார்.

மற்ற நடிகர்களைப் போல சிம்பு தொடர்ந்து நடிக்கும் நடிகர் இல்லை. ஒரு படத்திற்கு ஒரு படம் நிறைய இடைவெளி விடுகிறார். பத்து தல படம் வெளியாகி இரண்டு வருடங்கள் கழித்து அவரின் தக் லைப் படம் வெளியானது. ஆனால் அந்த படமும் ஹிட் அடிக்கவில்லை. அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வேலைகள் நடந்தது. ஆனால் புரமோ ஷூட்டோடு படத்தின் வேலை முடங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் தற்போது தாய்லாந்து சென்றுள்ள சிம்புவுக்கு AI டெக்னாலஜியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதாம். ஏற்கனவே கமல்ஹாசன் அமெரிக்கா சென்று AI கற்றுக் கொண்டார். அனேகமாக தக் லைப் படத்தில் நடிக்கும் போது ‘தம்பி இதை கற்றுக் கொள்ளுங்கள்.. உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என கமல் சொல்லி இருப்பார் போல. எனவேதான் சிம்புவும் அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

Published by
ராம் சுதன்