விஜய் பட தயாரிப்பாளரை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்!.. வேற ரூட்ல போறாரே!...

by சிவா |
விஜய் பட தயாரிப்பாளரை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்!.. வேற ரூட்ல போறாரே!...
X

Sivakarthikeyan: அறிமுக இயக்குனர்கள் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர்தான் சிவகார்த்திகேயன். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம் அறிமுக இயக்குனர்தான். இப்படி சொல்லிகொண்டே போகலாம். சினிமாவில் நடிக்க துவங்கியது முதல் பல வருடங்கள் கதாநாயகிகளை ஈவ் டீசிங் செய்யும் காதல் கலந்த காமெடி படங்களில் நடித்து வந்தார்.

இடையில் ஹீரோ, வேலைக்காரன் என சில சீரியஸான கதைகளில் நடித்தார். ஆனால், அந்த இரண்டு படங்களுமே ஓடவில்லை. எனவே, இது நமக்கு செட் ஆகாது என டான் போன்ற படங்களில் நடித்தார். ஆனாலும், டாக்டர், மாவீரன் போன்ற படங்களில் வித்தியாசம் காட்டினார்.

அமரன் செய்த சாதனை: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்த அமரன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. எனவே, அவரை வைத்து படமெடுக்க பெரிய இயக்குனர்களும், பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் ஆசைப்படுகிறார்கள்.

பெரிய இயக்குனர்கள்: இப்போது சிவகார்த்திகேயனும் அதே முடிவைத்தான் எடுத்திருக்கிறார். பெரிய நடிகர்களை வைத்து படமெடுக்கும் இயக்குனர்களையும், தயாரிப்பு நிறுவனங்களையும் அவரே தொடர்பு கொண்டு பேசுகிறார். அப்படித்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து வருகிறார்.

சுதா கொங்கரா: மணிரத்னத்தின் உதவியாளரும், சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தை எடுத்தவருமான சுதா கொங்கராவை அவரே தொடர்பு கொண்டே பேசிதான் இப்போது பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜயை வைத்து பிகில், கோட் ஆகிய படங்களை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்கிற செய்தி இப்போது வெளியே கசிந்துள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம்: கோட் படத்தில் ஒரு காட்சியில் நடித்தபோது அந்த நிறுவனத்துடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு காரணமாக இது நடந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்போது லவ்டுடே பிரதீப்பை வைத்து டிராகன் படத்தை தயாரித்து வருகிறது. பல ஊடகங்களுக்கும் அர்ச்சனா கல்பாத்தி பேட்டிகளை கொடுத்து வருகிறார். இப்படி பெரிய இயக்குனர்கள் மற்றும் நிறுவனங்களை சிவகார்த்திகேயன் ஸ்கெட்ச் போட்டு தூக்குவது மற்ற நடிகர்களை பொறாமைப்பட வைத்திருக்கிறது.

Next Story