விரைவில் மல்லுவுட்டில் என்ட்ரி கொடுக்கும் SK... அதுவும் அந்த நடிகரோட... இது சூப்பர் நியூஸ் ஆச்சே..!
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படியாக முன்னேறி தற்போது மிகச் சிறந்த நடிகராக உருமாறி இருக்கின்றார். நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தனது மிமிக்ரி மூலமாக சினிமா பயணத்தை தொடங்கிய இவர் இன்று பலரும் கொண்டாடும் நடிகராக உயர்ந்து நிற்கின்றார். இவரின் வளர்ச்சி பல இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து வருகின்றார் நடிகர் சிவகார்த்திகேயன்.
தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் ரிலீசாக உள்ள படங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த திரைப்படம் நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்து வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கின்றார்.
மேலும் அவரின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கின்றார். இப்படத்தின் பாடல், டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை காண வேண்டும் என்று பலரும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கின்றது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. இந்த திரைப்படம் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவில் அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த திரைப்படம் மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கின்றார்.
சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அது இல்லாமல் விபி சக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ் என்கிற திரைப்படத்திலும், அடுத்ததாக சுதா கோங்குரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் மலையாள திரைப்படத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வந்தது.
இது குறித்து சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் விரைவில் மலையாள சினிமாவில் நடிக்க இருப்பதாகவும், அது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் மோகன்லால் உடன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதன் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் மலையாள சினிமாவிலும் மிகப்பெரிய வரவேற்பை பெறப்போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.