Categories: latest news

தனுஷ் சிம்புவுக்கு டஃப் கொடுக்கும் எஸ்.கே!.. அடுத்தடுத்து நடிக்கவுள்ள 5 முக்கிய படங்கள்!..

Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நுழைந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து ஒருகட்டத்தில் முன்னணி நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். திரையுலகில் இவரை சுருக்கமாக எஸ்.கே என அழைக்கிறார்கள். மிகவும் குறுகிய காலகட்டத்தில் இவரின் சீனியர் நடிகர்களை பலரையும் ஓவர்டேக் செய்து மேலே போனார்.

தனுஷ், சிம்பு, சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, விக்ரம் போன்ற நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறினார். அவரின் வளர்ச்சி பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியது. இவரின் டாக்டர், டான் போன்ற பல படங்கள் 100 நாட்கள் ஓடி வசூலை அள்ளியிருக்கிறது.

காமெடி கலந்த காதல் கதைதான் அவரின் ரூட் என்றாலும் சமீபகாலமாக சீரியஸான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கிவிட்டார். அதுவும் ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார். இவரின் அமரன் படம் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தின் மெகா வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை 70 கோடியாக உயர்த்திவிட்டார். ஆனாலும் அவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்களும் காத்துக் கிடக்கிறார்கள். இந்நிலையில் எஸ்.கே. அடுத்தடுத்து நடிக்கவுள்ள 5 படங்கள், அதன் இயக்குனர்கள் பற்றி பார்ப்போம்.

ஏற்கனவே சுதாகொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இது 1960களில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதையாகும். இந்த படத்தில் ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். ஒருபக்கம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் எஸ்.கே. நடித்து வருகிறார். இது ஒரு பக்கா ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.

இந்த 2 படங்களுக்கு பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். விரைவில் ஷூட்டிங் துவங்கவுள்ளது. அடுத்து குட் நைட் பட இயக்குனர் வினாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அடுத்து விக்ரம் வேதா பட இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். அதோடு, 2018 படத்தை எடுத்த மலையாள இயக்குனர் ஜூட் அந்தோணி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

2 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

2 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

3 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

4 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

10 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

11 hours ago