அமரனா மாற ரத்தத்தை வேர்வையா சிந்திய எஸ்.கே.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ!..

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலகட்டத்தில் டிவி நிகழ்ச்சிகள் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். நல்ல கதைகளை தேர்வு செய்து படிப்படியாக முன்னேறி தற்போது முன்னணி நடிகராக மாறி இருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். அதிலும் அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கின்றது.
அமரன் திரைப்படம்: இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான திரைப்படம் அமரன். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற காரணத்தால் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தியது.
இப்படம் மொத்தமாக 360 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதன் மூலமாக தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் என்கின்ற இடத்தை பிடித்திருக்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயனால் நிச்சயம் ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என்று கூறி வந்தவர்களுக்கு தன்னால் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்பதை இப்படத்தின் மூலமாக நிரூபித்து காட்டி இருக்கின்றார். இப்படம் இவரின் கேரியரில் முக்கிய படமாக மாறி இருக்கின்றது.
அடுத்தடுத்த படங்கள்: நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு பெரிய பெரிய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். அந்த வகையில் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள்.
இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்ததாக இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த திரைப்படமும் ஒரு உண்மைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதால் நிச்சயம் இந்த படம் அமரன் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் கேரியரில் முக்கிய படமாக இருக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
அமரன் வீடியோ: நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்திற்காக பல்வேறு சிரமங்களை சந்தித்து இருக்கின்றார் என்று கூறி வந்தார்கள். அதாவது ஒரு ஆர்மி ஆபீசராக மாறுவதற்கு சிவகார்த்திகேயன் ஆர்மி அகாடமியில் முறையாக பயிற்சி எடுத்துக் கொண்டும், ஏகே 47 துப்பாக்கியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கான முறையான பயிற்சியையும் அவர் எடுத்துக் கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கின்றது. ஜிம்மில் தனது உடல் எடையை மாற்ற எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கின்றார் என்பது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. சில இடங்களில் வலி தாங்க முடியாமல் சிவகார்த்திகேயன் கதறுகின்றார். ரத்தத்தை வியர்வையாக சிந்தி இந்த திரைப்படத்திற்காக மெனக்கட்டு நடித்திருக்கின்றார்.