Categories: Cinema News latest news

சந்தானம் – சூரி.. யாருக்கு அதிக சம்பளம்?!.. ஹீரோவா ஜெயிச்சது யார் தெரியுமா?….

Santhanam Soori: திரையுலகை பொறுத்தவரை காமெடி நடிகர்களாக இருந்து ஹீரோவாக மாறி வெற்றி பெற்றவர்கள் வெகு சிலர்தான். கருப்பு வெள்ளை காலத்தில் கலைவாணர், சந்திரபாபு, நாகேஷ் போன்ற நடிகர்கள் அப்படி நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு பின் கவுண்டமணி அப்படி ஹீரோவாக நடித்து பார்த்தார். ஆனால், ஒர்க் அவுட் ஆகவில்லை. எனவே, மீண்டும் காமெடியனாக நடிக்க துவங்கினார். அதன்பின் அவர் ஹீரோவாக நடிக்க முயற்சி செய்யவே இல்லை.

அதேபோல் வடிவேலு, விவேக் போன்றவர்களும் சில படங்களில் ஹீரோவாக நடித்தனர். விவேக்கிற்கு அது செட் ஆகவில்லை. வடிவேலுவுக்கு இம்சை அரசன் படம் மட்டுமே ஓடியது. இப்போது காமெடி நடிகராக மாறிவிட்டார். அதேபோல், பல படங்களிலும் காமெடி நடிகராக நடித்த சந்தானமும் ஹீரோவாக மாறினார்.

கடந்த 11 வருடங்களாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நடிக்க துவங்கி உச்சம் தொட்ட சிவகார்த்திகேயனை பார்த்துதான் சந்தானமும் ஹீரோவாக நடிக்க துவங்கியதாக சொல்வார்கள். ஆனால், அவர் சந்தானம் நடிப்பில் வெளியான எல்லா படங்களும் ஹிட் அடிக்கவில்லை. தில்லுக்கு துட்டு போன்ற ஹாரர் காமெடி படங்கள் மட்டுமே ஓரளவுக்கு வசூலை பெறுகிறது.

ஒருபக்கம், காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் சூரியும் கதையின் நாயகனாக நடிக்க துவங்கிவிட்டார். அப்படி அவர் நடித்து வெளியான விடுதலை படம் சூப்பர் ஹிட் அடிக்கவே தொடர்ந்து கருடன், மாமன், மண்டாடி போன்ற படங்களில் நடித்தார். இதில், கருடன் படம் சூப்பர் ஹிட் அடிக்க, மாமன் படம் சுமாரான வெற்றியை பெற்றிருக்கிறது.

சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படமும், சூரியின் மாமன் படமும் ஒரே நாளில் வெளியானது. டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடிக்க சந்தானம் 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார். ஆனால், மாமன் படத்தில் நடிக்க சூரி 8 கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறார். எனவே, ஹீரோவாக சூரியே முன்னணியில் இருக்கிறார்.

அதேநேரம், சிம்பு அடுத்து நடிக்கும் படத்தில் காமெடி நடிகராக நடிக்க அவருக்கு 10 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. எனவே, காமெடி நடிகராக சந்தானத்திற்கு இருக்கும் மவுசு இன்னமும் அப்படியேதான் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் சுமாரான வெற்றியையே பெற்றிருக்கிறது.

Published by
சிவா