1. Home
  2. Cinema News

சுந்தர்.சி கொடுத்த சரக்கு பார்ட்டி?!.. யாரெல்லாம் வந்திருக்காங்க பாருங்க!. வைரல் போட்டோஸ்!...


Sundar C: 30 வருடங்களாக திரைப்படங்களை இயக்கி வருபவர் சுந்தர் சி. குடும்ப செண்டிமெண்ட், காதல், காமெடி கலந்த கலவையாக படமெடுப்பதில் கில்லாடி இவர். சுந்தர்.சி படம் என்றாலே குடும்பத்துடன் போய் பார்க்கலாம் என்கிற நம்பிக்கையை ரசிகர்களிடம் ஏற்படுத்தியதான் இவர் செய்த சாதனை.

நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சுந்தர்.சி. இயக்கிய 95 சதவீத படங்கள் வெற்றிப்படங்கள்தான். தனது படம் ரசிகர்களை கவரவேண்டும், தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்க வேண்டும் என்பதில் எப்போதும் சுந்தர்.சி தெளிவாக இருப்பார். பெரும்பாலும் கார்த்திக்கை வைத்து அதிக படங்களை இயக்கியுள்ளார்.


உள்ளத்தை அள்ளித்தா: அதில் உள்ளத்தை அள்ளித்தா படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. அஜித்தை வைத்து உன்னைத்தேடி, கமலை வைத்து அன்பே சிவம் ஆகிய படங்களை இயக்கினார். விஷாலை வைத்து ஆம்பள எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். அடுத்து விஷாலை வைத்து சுந்தர்.சி. இயக்கிய ஆக்‌ஷன் படம் ஓடவில்லை.


மதகஜராஜா: ஆனால், 12 வருடங்களுக்கு முன்பு விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி உள்ளிட்ட பலரையும் வைத்து சுந்தர் சி. இயக்கிய மதகஜராஜா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. பொங்கலுக்கு வெளியான படங்களில் இந்த படமே அதிக வசூலை பெற்றிருக்கிறது. படம் வெளியாகி 10 நாட்களில் இப்படம் 39.5 கோடியை வசூல் செய்திருக்கிறது. எப்படியும் இப்படம் 50 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சக்சஸ் பார்ட்டி: இந்நிலையில்தான் நேற்று இரவு சுந்தர்.சி, குஷ்பு கலந்துகொண்ட ஒரு பார்ட்டி தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில், விஷால், நடிகை மீனா, யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சங்கீதா, நடன இயக்குனர் பிருந்தா, விஜய் டிவி திவ்யதர்ஷினி, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


அவர்கள் மது அருந்தும் காட்சிகளும் புகைப்படத்தில் இடம் பெற்றிருக்கிறது. மதகஜராஜா சூப்பர் ஹிட் அடித்திருப்பதால் இது சுந்தர்.சி. கொடுத்த சக்சஸ் பார்ட்டியாக இருக்கலாம் என்றே கணிக்கப்படுகிறது. இந்த புகைப்படங்களை நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.