Categories: latest news

கைதிக்கு வில்லனாகும் ரோலக்ஸ்!.. இப்படி ஒரு டிவிஸ்ட்டே எதிர்பார்க்கலயே!..

Kaithi 2: இளசுகளுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக மாறியிருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவரின் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களுக்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பெரும்பாலும் போதை மருந்து கடத்தலை மையமாக வைத்தே லோகேஷ் படங்களை இயக்கி வருகிறார்.

இவரின் மாநகரம் படத்தை பார்த்துதான் விஜய் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். அப்படி வெளியான மாஸ்டர் படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், கமலை ஒரு பக்கா ஆக்‌ஷன் ஹீரோவாக விக்ரமில் கட்டினார் லோகேஷ். அப்படி வெளியான விக்ரம் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

பல வருடங்களுக்கு பின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் படங்களை தயாரிக்க காரணமே விக்ரம் படம்தான். அதன்பின் விஜயை வைத்து லோகேஷ் இயக்கிய லியோ படமும் வெற்றி பெற்றது. இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த படத்திற்கு பின் ஒரு படத்தில் லோகேஷ் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அடுத்தடுத்த படங்களை இயக்கவும் திட்டமிட்டிருக்கிறார். அடுத்து கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்கவிருக்கிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவை படக்குழு கேட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஒருபக்கம், இந்த படத்தில் கார்த்திக்கு வில்லனாக அவரின் அண்னன் சூர்யாவையே வில்லனாக நடிக்க வைக்கலாம் என்கிற ஐடியா லோகேஷுக்கு இருக்கிறதாம். ஏற்கனவே விக்ரம் படத்தில் ரோலக்ஸாக கலக்கி இருந்தார் சூர்யா. அந்த வேடத்திலேயே இந்த படத்திலும் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு, கமல்ஹாசன் இந்த படத்தில் விக்ரமாக கேமியோ பண்ணுவார் என்கிறார்கள். அதாவது ரசிகர்கள் அழைக்கும் LCU இந்த படத்தில் இருக்கிறது.

விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதையடுத்து அந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து லோகேஷ் ஒரு தனிப்படம் எடுக்க வேண்டும் என ரொம்ப நாட்களாகவே சூர்யா ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். எனவே, அவர்களின் ஆசை நிறைவேறும்படி கைதி 2-வில் சூர்யாவை ரோலக்ஸ் நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது மட்டும் நடந்தால் சூர்யா ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம்தான்!..

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

48 minutes ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

1 hour ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

8 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

11 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

12 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

1 day ago