Connect with us

அப்பா அம்மா செண்டிமெண்ட்!.. கூட்டுக் குடும்பம் என்னாச்சி?!.. சூர்யா கட்டும் புதிய வீடு!..

latest news

அப்பா அம்மா செண்டிமெண்ட்!.. கூட்டுக் குடும்பம் என்னாச்சி?!.. சூர்யா கட்டும் புதிய வீடு!..

Actor Suriya: நடிகர் சிவக்குமாருக்கு சிகரெட், மது என எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. அவரைப்போலவே சூர்யா, கார்த்தி என அவரின் இரண்டு மகன்களுக்கும் எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. சின்ன வயதிலிருந்து அவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்தவர் சிவக்குமார். அது இப்போது வரை தொடர்ந்து வருகிறது. ஷூட்டிங் முடிந்தால் வீடு என்பதில் சூர்யா, கார்த்தி இருவரும் தெளிவாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் சினிமா பிரபலங்கள் நடத்தும் எந்த பார்ட்டியிலும் பார்க்க முடியாது.

சினிமாவிலேயே ஆர்வமில்லாமல் இருந்த சூர்யா வஸந்த் கேட்டதால் நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார். துவக்கத்தில் நடிக்க தெரியாமல் தடுமாறினார். அதன்பின் கவுதம் மேனன், பாலா போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டார். சிங்கம், சிங்கம் 2 போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சூர்யா. முதலில் சிவக்குமார் இதற்கு சம்மதிக்கவில்லை. சில வருடங்கள் இருவரும் காத்திருந்து பெற்றோரின் சம்மத்தோடு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் சென்னை தி. நகரில் உள்ள வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார் சூர்யா. 3 அடுக்கு கொண்ட அந்த வீட்டில் சிவக்குமார், சூர்யா, கார்த்தி என மூவரும் ஒவ்வொரு வீட்டில் இருந்தனர்.

ஆனால், சில வருடங்களுக்கு முன்பு மனைவி ஜோதிகாவுக்காக மும்பையில் புது வீடு வாங்கி அங்கு செட்டிலானார் சூர்யா. எனக்காக ஜோதிகா பல வருடங்கள் இங்கே இருந்தார். அவருக்காக இப்போது நான் மும்பைக்கு போயிருக்கிறேன் என ஃபீலிங்கோடு பேசினார். அதேநேரம், கார்த்தி பெற்றோருடன் வசித்து வருகிறார்.

சூர்யாவும், ஜோதிகாவும் சென்னை வரும்போது கூட அப்பா வீட்டுக்கு வருவது இல்லை. மாறாக நட்சத்திர ஹோட்டலிலேயே தங்கி வந்தார்கள். இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு புதிய வீட்டை கட்டி வருகிறார் சூர்யா. எனவே, ஷூட்டிங்கில் கலந்துகொள்ள சென்னை வந்தால் இனிமேல் அவர் அந்த வீட்டிலேயே தங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவுக்கு கங்குவா படம் தோல்வி அடைந்த நிலையில் ரெட்ரோ படம் ஓரளவுக்கு வசூலை பெற்றது. இப்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top