சூர்யாவின் அடுத்த படம் 300 கோடி பட்ஜெட்!. இயக்குனர் யார் தெரியுமா?!..

Actor Suriya: சூர்யாவுக்கு இது போதாத காலம் போல. அவரின் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி இரண்டரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் ஓடவில்லை. அதன்பின் கங்குவா படத்தில் நடிக்கப்போனார். சிறுத்தை சிவா மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் நடித்தார்.
கங்குவா: இந்த படத்தை அதிக பொருட்செலவில் சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா தயாரித்தார். இந்த படத்திற்கு அதிக அளவில் புரமோஷனும் செய்யப்பட்டது. அதோடு, இந்த படம் 2 ஆயிரம் கோடியை வசூலிக்கும் என ஞானவேல்ராஜாவும், படம் பார்க்கும் எல்லோரும் வாயை பிளப்பார்கள் என சூர்யாவும் பேசினார்கள்.
ஆனால், படம் வெளியான போது ரசிகர்கள் நெகட்டிவாக பேசினார்கள். சூர்யாவை பிடிக்காத பலரும் இதுதான் சரியான நேரம் என களத்தில் இறங்கி கங்குவா படத்திற்கு எதிராக கம்பு சுத்தினார்கள். அந்த படத்தை எவ்வளவு மட்டம் தட்டமுடியுமோ அந்த அளவுக்கு மட்டம் தட்டினார்கள். இதன் காரணமாக படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ரெட்ரோ: இதனால் சூர்யாவும் அப்செட் ஆனார். ஆனாலும், அதிலிருந்து வெளியேறி ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போனார். அந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு முன்பே கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்கிற படத்திலும் நடித்துமுடித்துவிட்டார்.
பாசில் ஜோசப்: இந்நிலையில், தெலுங்கில் நாக சைத்தன்யாவை வைத்து தண்டேல் என்கிற் படத்தை இயக்கிய சண்டோ மொண்டேட்டி இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சூர்யா அல்லது ராம்சரண் இரண்டில் யாரேனும் ஒருவர் ஹீரோவாக நடிக்க வாய்ப்பிருக்கிறது இயக்குனரே சொல்லியிருக்கிறார்.இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி எனவும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே மலையாள இயக்குனர் மற்றும் நடிகர் பாசில் ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் சூர்யா சம்மதித்துள்ளார். எனவே, எந்த படம் முதலில் துவங்கும் என தெரியவில்லை. இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.