நான் கங்குவா படம் பண்ன அஜித்தான் காரணம்!.. சூர்யா சொல்றத கேளுங்க!.

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:04  )

Kanguva: பொதுவாக நடிகர்கள் இயக்குனர்களிடம் கதை கேட்டு அந்த கதை பிடித்திருந்தால் அதில் நடிக்க சம்மதிப்பார்கள். ஒரு நடிகர் ஒரு இயக்குனரை தேர்ந்தெடுப்பதற்கு பல காரணங்கள் இருக்கும். அந்த இயக்குனர் ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட்டு வந்திருப்பார். அந்த படம் பேசப்பட்டிருக்கும்.

அல்லது அந்த இயக்குனர் தொடர் ஹிட் படங்களை கொடுப்பவராக இருப்பார். பெரிய இயக்குனராக இருந்தால் அந்த இயக்குனரை நடிகர்கள் தேடி சென்று ‘நாம் இருவரும் இணைந்து ஒரு படம் செய்வோம் சார்’ என கேட்பார்கள். சமீபத்தில் கூட வெற்றிமாறனை சந்தித்து அப்படி வாய்ப்பு கேட்டார் ஜெயம் ரவி.

சேது படத்தை பார்த்துவிட்டு பாலாவின் அலுவகத்திற்கு ஓடிப்போய் ‘எனக்கும் இந்த மாதிரி ஒரு படம் பண்ணுங்கண்ணே’ என கேட்டவர்தான் சூர்யா. அதன்பின்னரே அவரை வைத்து நந்தா படத்தை இயக்கினார் பாலா. அதன் வரிசையில் சூர்யா கங்குவா படத்தில் நடிப்பதற்கு அஜித்தே காரணம் என அவரே இப்போது சொல்லி இருக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கங்குவா. மிகவும் அதிக பட்ஜெட்டில் பல மொழிகளிலும் இப்படம் உருவாகியிருக்கிறது. சரித்திர கதை கொண்ட படமாக கங்குவாவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்காக கடுமையான உழைப்பை கொட்டியிருக்கிறார் சூர்யா என்கிற படக்குழு. மொத்தம் 2 பாகங்களாக இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் முதல் பாகம் வருகிற நவம்பர் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எனவே, படத்தை புரமோஷன் செய்யும் வேலையில் படக்குழு இறங்கியிருக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யா ‘ அஜித் சாருடன் இணைந்து சிவா நிறைய நல்ல படங்களை கொடுத்திருக்கார். அதையெல்லாம் நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான் அவர் மீது எனக்கு நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கை தான் கங்குவா படம் உருவாக காரணமாக அமைந்தது. கங்குவா படம் மூலம் சிவா மேலும் உயரத்திற்கு போவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என சொல்லி இருக்கிறார்.

Next Story