சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர். சில வருடங்கள் சாக்லேட் பாயாக நடித்தார். அதன்பின் பாலாவின் நந்தா, பிதாமகன், கவுதம் மேனனின் காக்க காக்க படங்கள் மூலம் தன்னை பட்டை தீட்டிக்கொண்டார்.
தனுஷை போலவே ஒருபக்கம் நடிப்புக்கு தீனி போடும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள். ஒரு பக்கம் மசாலா கமர்ஷியல் படங்கள் என பயணித்து வருகிறார். மற்ற நடிகர்களை போலவே இவரும் நிறைய வெற்றி தோல்விகளை கொடுத்திருக்கிறார். பெரும்பாலும் சொந்த படமெடுக்கும் நடிகர் இவர்.
சூர்யாவின் 2டி பிலிம்ஸ் நிறுவனம் பல திரைப்படங்களையும் தயாரித்துள்ளது. ஒருபக்கம் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் நிறைய ஏழை மாணவ, மாணவிகளை படிக்க வைத்தும் வருகிறார். தனது வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் கல்வி போன்ற நல்ல விஷயங்களுக்காக ஒதுக்குகிறார்.
அவரோடு சேர்ந்து அவரின் தம்பி கார்த்தியும் பலருக்கும் உதவி செய்து வருகிறார். சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய படங்களில் தான் ஒரு சிறந்த நடிகர் என நிரூபித்து காட்டினார் சூர்யா. அதன்பின் எதற்கும் துணிந்தவன் என்கிற மசாலா படத்தில் நடித்தார். அதன்பின் கடந்த 2 வருடங்களில் அவரின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
அதற்கு காரணம் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இது ஒரு சரித்திர கதை கொண்ட திரைப்படமாகும். மிகவும் அதிக பட்ஜெட்டில் உருவாக்கி பல மொழிகளிலும் இப்படத்தை வெளியிடுகிறார்கள். வருகிற நவம்பர் 14ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இந்த படம் தொடர்பான புரமோஷன் விழாவில் பேசிய சூர்யா ‘20 வருடங்களுக்கு முன்பு ரஜினி சாருடன் விமானத்தில் சென்ற போது ’நீங்கள் ஹீரோ மட்டுமில்லை. நல்ல நடிகரும் கூட.. எனவே, வெறும் கமர்ஷியல் படங்களில் மட்டும் நடிக்கக் கூடாது’ என சொன்னார். அது என் மனதில் பதிந்துவிட்டது. அதனால்தான், சிங்கம் போன்ற கமர்ஷியல் படங்களிலும் நடிக்கிறேன். ஜெய்பீம் போன்ற கதைகளிலும் நடிக்கிறேன். ரசிகர்களும் என்னிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்’ என சொல்லி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…