அங்கயும் இவ்ளோ ஃபேன்ஸா!.. கங்குவா புரமோஷனில் கலக்கும் சூர்யா!.. செல்பி போட்டோ செம வைரல்!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:23  )

Ganguva: 27 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் சூர்யா. வஸந்த் இயக்கிய நேருக்கு நேர் என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் அமீரின் இயக்கத்தில் மௌனம் பேசியதே, பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன், கவுதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமனார்.

துவக்கத்தில் சாக்லேட் பாயாக பல படங்களிலும் நடித்தபோது தடுமாறிய சூர்யா ஒரு கட்டத்தில் சிறந்த நடிகராக மாறினார். அயன், சிங்கம், சிங்கம் 2, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் சிறப்பாக நடித்திருந்தார். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் படம் சூர்யாவின் மற்றொரு பரிமாணத்தை ரசிகர்களிடம் காட்டியது.

இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மிகவும் அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகியிருப்பதால் இரண்டு பாகங்கள் வெளியாகவுள்ளது. இதில், முதல் பாகம் வருகிற நவம்பர் 14ம் தேதி உலகமெங்கும் பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

அதிக மொழிகளில் உருவாகி வெளியாகும் முதல் சூர்யா படம் கங்குவாதான். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். கங்குவா படத்திற்காக கடுமையான உழைப்பை போட்டிருக்கிறார் சூர்யா என்கிற படக்குழு.

கங்குவா விரைவில் ரிலீஸாகவுள்ளதால் இப்படத்தின் புரமோஷன் வேலைகளை படக்குழு துவங்கிவிட்டது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நட்டி நடராஜ், இயக்குனர் சிவா ஆகியோர் ஒருபக்கம் ஊடகங்களில் பேசி வருகிறார்கள். கங்குவா படம் 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும் என ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.

இந்நிலையில், வட இந்தியாவில் கங்குவா படத்தை புரமோஷன் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார். சமீபத்தில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதன்பின், அங்கு சூர்யாவை பார்க்க கூடிய ரசிகர்களுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார். எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பின் 2 வருடங்கள் கழித்து கங்குவா வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Next Story