ஆம்பளைக்கும் மட்டும்தான் எல்லாமா?!.. ஜோதிக்காவுக்காக அதை செய்தேன்.. சூர்யா பேட்டி..
Suriya jyotika: கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகமானவர்கள்தான் சூர்யா மற்றும் ஜோதிகா. அஜித்துடன் வாலி படத்தில் அறிமுகமான ஜோதிகா அடுத்து சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தார். அந்த படத்திலேயே இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி ஏற்பட்டது.
திரையில் பார்ப்பதற்கும் இருவரின் ஜோடியும் நன்றாக இருந்ததால் இயக்குனர்கள் பலரும் அவர்கள் இருவரையும் படங்களில் நடிக்க வைத்தனர். தொடர்ந்து காக்க காக்க, மாயாவி, பேரழகன், உயிரிலே கலந்தது, சில்லுன்னு ஒரு காதல் என பல படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.
இதனால், இருவரும் இடையே காதல் மலர்ந்தது. ஜோதிகாவின் வீட்டில் சம்மதித்தாலும் சூர்யாவின் வீட்டில் சம்மதிக்கவில்லை. அம்மாவின் சம்மதத்தை சூர்யா பெற்றாலும் அப்பா சிவக்குமார் முரண்டு பிடித்தார். எனவே, அவரின் சம்மதத்தை பெற சூர்யா ஜோதிகா இருவரும் சில வருடங்கள் காத்திருந்தனர்.
அதன்பின் அனைவரின் சம்மதத்தை பெற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகன், ஒரு மகள் என அழகான குடும்பம். திருமணம் ஆனதிலிருந்தே சென்னையில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த சூர்யா சில மாதங்களுக்கு முன்பு மும்பைக்கு குடி பெயர்ந்தார்.
அங்கிருந்தவாறே படப்பிடிப்புகள் கலந்து கொண்டு வருகிறார். அதோடு, சூர்யாவை ஹிந்தி படங்களிலும் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார் ஜோதிகா. விரைவில் கங்குவா படம் வெளியாகவிருக்கும் நிலையில் இது தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார் சூர்யா. அப்போது ‘நீங்கள் ஏன் சென்னையிலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்துவிட்டீர்கள்?’ என கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன சூர்யா ‘ஜோதிகா மும்பையை சேர்ந்தவர் என்றாலும் திருமணத்திற்கு பின் எனக்காக பல வருடங்கள் சென்னையில் வசித்தார். ஆண்களுக்கு என்ன தேவையோ அது பெண்களுக்கும் தேவைதான். அவரின் பெற்றோர், தோழிகள், உறவினர்கள் மும்பையில் இருக்கிறார்கள். அவருக்கான எல்லாம் இங்கே இருக்கிறது. அதோடு, என் குழந்தைகளும் இங்கே படிக்கிறார்கள். எனவே, அவருக்காக நானும் மும்பைக்கு வந்துவிட்டேன்’ என சொல்லி இருக்கிறார்.