தனுஷின் அந்த படத்தில் நடிகர் சூர்யாவா?.. யாரும் எதிர்பார்க்காத காம்போவால இருக்கு..!

Actor Dhanush: தமிழ் சினிமாவில் தற்போது படு பிஸியான நடிகராக மாறி இருக்கின்றார் நடிகரும் இயக்குனருமான தனுஷ். தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நிற்க கூட நேரமில்லாமல் நடித்து வருகின்றார் நடிகர் தனுஷ். இவர் கடைசியாக தனது 50வது படமான ராயன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
இந்த திரைப்படம் கொடுத்த வெற்றிக்கு பிறகு தொடர்ந்து இயக்கத்திலும் கவனம் செலுத்தி வருகின்றார் நடிகர் தனுஷ். அந்த வகையில் இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்பட இயக்கி தானே தயாரிக்கவும் செய்திருக்கின்றார். இந்த திரைப்படம் முதலில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தின் வருகையால் பிப்ரவரி 21ஆம் தேதிக்கு படத்தை தள்ளி வைத்திருக்கிறார்கள்.
இதற்கு அடுத்ததாக இட்லி கடை என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படமும் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 10ம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த இரண்டு திரைப்படங்களை தானே இயக்கியிருக்கும் தனுஷ் தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார்.
அந்த வகையில் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் இதுவரை நடிக்கிறாத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இட்லி கடை திரைப்படத்தை விறுவிறுப்பாக எடுத்து வரும் நடிகர் தனுஷ் அந்த திரைப்படத்தை முடித்துவிட்டு எந்த திரைப்படத்தில் தான் நடிக்கப் போகின்றார் என்கின்ற குழப்பம் ரசிகர்களிடையே நீடித்து வருகின்றது.
ஏனென்றால் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கும் நிலையில் ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதற்கு இடையில் மீண்டும் தெலுங்கு இயக்குனரான வெங்கி அட்லுரி இயக்கத்தில் அடுத்ததாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
ஏற்கனவே தனுஷ் மற்றும் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தொடர்பான பேச்சுவார்த்தை அடிபட்டு வந்த நிலையில் சமீப நாட்களாக நடிகர் தனுஷ் அடுத்ததாக வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார் என்கின்ற தகவல் வெளியாகி வருகின்றது. இந்த திரைப்படத்திற்கு விஜயகாந்த் பட டைட்டிலான ஹானஸ்ட் ராஜ் என்பதை வைக்க இருப்பதாகவும் கூறி வந்தார்கள்.
ஏற்கனவே நடிகர் தனுஷ் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் தமிழை காட்டிலும் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனை தொடர்ந்து இரண்டாவதாக மீண்டும் அந்த இயக்குனருடன் இணைந்து நடிகர் தனுஷ் பணியாற்ற இருக்கின்றார்.
தற்போது புதிய தகவலாக மற்றொரு செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகின்றது. அதாவது இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து சூர்யாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றாராம். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.