Surya: அதுக்கு வாய்ப்பே இல்லை!... லோகேஷ் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாரு... என்ன சூர்யா இப்படி சொல்லிட்டாரு!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:17  )

தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். அடுத்த இரண்டு ஆண்டுகள் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகின்றார். மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி இருக்கின்றது கங்குவா திரைப்படம்.

வரும் நவம்பர் 14ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது அக்டோபர் 10ம் தேதியே படத்தை ரிலீஸ் செய்வதற்கு முடிவு செய்திருந்தார்கள். ஆனால் அப்போது நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ்-ஆன காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தள்ளி வைத்து விட்டார்கள்.

வரும் 14ஆம் தேதி கங்குவா படம் சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கின்றது. இதனால் படக்குழுவினர் ப்ரோமோஷன் வேலைகளில் படு பிஸியாக செயல்பட்டு வருகிறார்கள்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சென்னையில் படத்தின் ஆடியோ லான்ச் மிகப் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது. நடிகர் சூர்யா தொடர்ந்து படத்தின் பிரமோஷனுக்காக தமிழ்நாடு, கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து படம் குறித்து பேசி வருகின்றார்.

சமீப நாட்களாக நடிகர் சூர்யாவின் வீடியோ தான் இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் கேரளாவிற்கு ப்ரோமோஷனுக்காக சென்றிருந்த நிலையில் அங்கு ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகர் சூர்யா பதிலளித்திருந்தார். அதில் ஒருவர் விக்ரம் திரைப்படத்தில் கடைசியாக வரும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கெட்டவனாக காட்டியிருந்தார்கள் .

ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தனியாக வைத்து ஒரு படத்தை இயக்கும்போது அப்படத்தில் அவரை நல்லவனாக காட்டுவதற்கு வாய்ப்பிருக்கின்றதா? என்று கேள்வி எழுதப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகர் சூர்யா அதனை லோகேஷ் கனகராஜ் தான் முடிவு செய்ய வேண்டும் ஆனால் எனக்கு தெரிந்து அதனை லோகேஷ் கட்டாயம் விரும்ப மாட்டார்.

ரோலக்ஸ் கதாபாத்திரம் முழுக்க முழுக்க ஒரு கெட்டவன் கதாபாத்திரமாக தயார் செய்யப்பட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை நல்லவனாக கொண்டு செல்வராக என்று கேட்டால் அது சந்தேகம் தான். அந்த விஷயத்தில் அவரை காம்ப்ரமைஸ் செய்வது என்பது மிகவும் கஷ்டம் என்று பதிலளித்திருந்தார்.

நடிகர் சூர்யா ப்ரொமோஷத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் ரோலக்ஸ் குறித்த கேள்விகள் அதிக அளவில் எழுப்பப்பட்டு வருகின்றது. அதற்கு சூர்யாவும் தொடர்ந்து பதில் அளித்து வருகின்றார். விக்ரம் திரைப்படத்தில் வெறும் 5 நிமிடங்கள் வந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்துக்கு இவ்வளவு ரசிகர்களா என்று நடிகர் சூர்யாவே ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கின்றார் லோகேஷ் கனகராஜ்.

Next Story