இந்த வருஷம் திருவண்ணாமலை தீபத்துக்கு ஏத்த பாட்டுதான்! வெளியான ‘கங்குவா’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்
சூர்யாவின் நடிப்பில் தயாரான கங்குவா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகி ரசிகர்களுக்கு பெரிய விருந்தே வைத்திருக்கிறார் சூர்யா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபிதியோல் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் கங்குவா. கிட்டத்தட்ட 2 வருடமாக தயாரான இந்த கங்குவா திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகின்றது.
எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு சூர்யாவின் எந்தவொரு தமிழ் படங்களும் வெளியாக வில்லை. வணிக ரீதியாக எதற்கும் துணிந்தவன் படம் வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக சரியாக பேசப்படவில்லை. அதனால் இந்த கங்குவா திரைப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்தப் படத்தின் பட்ஜெட் 350 கோடிக்கும் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இந்த கங்குவா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் விவேகா வரியில் உருவான பாடலான ‘ஆதி நெருப்பே ஆறாத நெருப்பே’ என்ற பாடல்தான் இப்போது வெளியாகியிருக்கின்றது. இந்தப் பாடலை மகாலிங்கம் பாடியிருக்கிறார். கூடவே தீப்தி சுரேஷும் பாடியிருக்கிறார்.
புஷ்பா படத்திற்கு பிறகு தேவி ஸ்ரீ பிரசாத் இசை இந்திய அளவில் மிகவும் பிரபலமானது. அதை இன்னும் பிரபலமாக்கியிருக்கிறது கங்குவா திரைப்படத்தின் இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள். இதை பார்த்த பல பேரும் பாடலை கொண்டாடி வருகின்றனர். அதுவும் 3 நிமிட ஓடும் இந்தப் பாடலில் இரு இடங்களில் சூர்யா ஆடுவது போல காட்டியிருக்கிறார்கள்.
அந்த சிறு காட்சியிலேயே சூர்யாவின் ஆக்ரோஷமான நடிப்பும் ஆட்டமும் பார்க்கிறவர்களை ஆட வைக்கிறது. மேலும் சிலர் சாமி பாடல் மாதிரி இருக்கிறது என்றும் இந்த வருஷம் திருவண்ணாமலை தீபத்துக்கு ஏற்ற பாடல் என்றும் கூறி வருகிறார்கள்.
தமிழை வளர்க்கும் நோக்கத்தில் விவேகாவின் அழகிய தமிழ் வரிகள் ஏராளமானவை இந்தப் பாடலி இடம் பெற்றுள்ளது. குறிப்பாக ‘மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த குடி.. , குமரிக்கண்டம் மூத்தகுடி நெருப்போ’ போன்ற வரிகள். பாடலாசிரியர் விவேகா அவரின் தமிழ், தமிழ் எண்ணத்தின் மீதும் கொண்ட பற்றின் வெளிப்பாடே இவ்வரிகள். இவ்வரிகளை கேட்கும் பொழுது உள்ளம் சிலிர்க்கிறது உடல் செங்குருதியில் திளைக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ: