5 கெட்டப்பு!. வேறலெவல் காமெடி!.. இந்த படத்துல பழைய வடிவேலுவை பார்ப்பீங்க!...

by சிவா |
5 கெட்டப்பு!. வேறலெவல் காமெடி!.. இந்த படத்துல பழைய வடிவேலுவை பார்ப்பீங்க!...
X

Vadivelu: தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. மதுரையிலிருந்து சென்னை வந்து கிடைக்கும் வேலைகளை செய்து ராஜ்கிரண் அலுவலகத்தில் எடுபுடி வேலைகளை செய்து அவர் தயாரித்து நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர்தான் வடிவேலு.

வைகைப்புயல் என்கிற அடைமொழியோடு பல படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். அவர் பேசும் மதுரை பாஷையும், உடல் மொழியும் ரசிகர்களை சிரிக்க வைக்க வைத்தது. கிராமம் தொடர்பான கதைக்கு மிகவும் பொருத்தமான காமெடி நடிகராக இருந்தாலும் போகப்போக நகரத்தில் நடக்கும் கதைகளிலும் நடிக்க துவங்கினார்.

ஒருகட்டத்தில் தினமும் 10 லட்சம் சம்பளம் வாங்கும் முன்னணி காமெடி நடிகராக மாறினார். ஆனால், தவளை தன் வாயால் கெடும் என்பது போல தனது வாயாலேயே கெட்டுப்போனார் வடிவேலு. பல இயக்குனர்களிடம் சண்டை போட்டார். இப்படி உடை வேண்டும், இப்படி வசனம் இருக்க வேண்டும் என எல்லாவற்றிலும் தலையிட்டார். அதனால்தான் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் பல நாட்கள் அடித்துவிட்டு வெளியேறினார்.

இதனால் அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர். இதைத்தொடர்ந்து சுமார் 4 வருடங்கள் வடிவேலு சினிமாவில் நடிக்கவில்லை. அதன்பின் நாய்சேகர் ரிட்டன்ஸ் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதன்பின் சந்திரமுகி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் அவரின் காமெடி எடுபடவில்லை.

அதேநேரம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடித்த மாமன்னன் திரைப்படம் வடிவேலுவுக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது. இப்போது சுந்தர்.சி இயக்கி நடித்து வரும் கேங்கர்ஸ் என்கிற படத்தில் வடிவேலு நடித்து வருகிறார். இத படத்தில் வடிவேலுவுக்கு மொத்தம் 5 வேடமாம்.

அதிலும் படத்தின் இறுதியில் லேடி கெட்டப்பிலும் வருவாராம். இந்த படத்தின் காமெடி காட்சிகள் ரசிகர்களை ரசிக்க வைக்கும் என்கிறது படக்குழு. சிலரோ இந்த படத்தில் பழைய வடிவேலுவை பார்க்கலாம் என்கிறார்கள் சிலர். தமிழ் சினிமாவில் காமெடி வறட்சி நிலவும் நிலையில் வடிவேலு மீண்டும் பழைய பார்மில் வந்தால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.

Next Story