பேரே தெரியாமல் அந்த நடிகையுடன் நடித்த விதார்த்.. கடைசில என்னாச்சு தெரியுமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:49  )

தமிழ் சினிமாவில் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் அவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் என இதைத்தான் நாம் பிரம்மாண்டமாக பேசுவது வழக்கம். ஆனால் அவர்களையும் தாண்டி தனது நடிப்பில் ஒரு எதார்த்தத்தையும் நல்ல நல்ல படங்களை கொடுத்தும் ஒரு சிறந்த நடிகர்களாக இருக்கும் பல நடிகர்களை பற்றி தெரியாமல் நாம் இருக்கிறோம். அவர்களை பற்றி பேசுவதும் கிடையாது.

அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் நடிகர் விதார்த். பெரிய கமர்சியல் படங்கள் இவர் நடிக்கவில்லை என்றாலும் இவர் நடித்த அத்தனை படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல ஒரு ரீச்சை பெற்றுள்ளன. காடு ,மைனா, குரங்கு பொம்மை ,காற்றின் மொழி, இறுகப்பற்று போன்ற படங்களை எடுத்துக் கொண்டால் இவருடைய நடிப்பு அதில் பாராட்டப்பட கூடியதாகவே இருந்திருக்கும்.

இப்படி சின்ன சின்ன பட்ஜெட் உள்ள படங்களில் நல்ல கதைக்களத்தில் அடுத்தடுத்து சிறந்த படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் விதார்த். இவர் முதன்முறையாக தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து அளித்த ஒரு பேட்டி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் ஒரு பெரிய நடிகையைப் பற்றி விதார்த் கூறிய தகவல்தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தன்னுடன் நடித்த ஒரு பெரிய நடிகையைப் பற்றி எந்த விவரமும் தனக்கு தெரியவே தெரியாது என கூறி இருக்கிறார். அவர் பெயரும் தெரியாதாம். அவர் நடித்த படங்கள் பற்றியும் எதுவும் தெரியாதாம். ஆனால் அந்த நடிகை விதாரத்தை பார்த்ததும் இவர் நடித்த படங்களின் பெயர்களை பட்டியலிட்டு நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளீர்கள் என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

உடனே விதார்த் உங்கள் பெயர் என்ன என கேட்டாராம். இதைக் கேட்டதும் அந்த நடிகைக்கு முகமே வாடிவிட்டதாம். நான் இப்படி கேட்டதும் அவர் மிகவும் கஷ்டப்பட்டு விட்டார் என விதார்த் கூறினார். அந்த அளவுக்கு தன்னுடைய அம்மா தங்கை மனைவி இவர்களைத் தவிர வேறு எந்த பெண்களிடமும் அவ்வளவு எளிதாக பழ்காதவராம்.

யாரைப் பற்றியும் எந்த நடிகையைப் பற்றியும் விதாரத்துக்கு தெரியவே தெரியாது என அவருடைய மனைவி அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். விதார்த் கூறிய அந்த பெரிய நடிகை என்று சொல்லும்போது அவருடன் சேர்ந்து நடித்த ஒரே ஒரு பெரிய நடிகை என்றால் அது ஜோதிகா தான். ஒரு வேளை ஜோதிகாவை பற்றி தான் விதார்த் கூறியிருக்கிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Next Story